தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கு பாலிவுட் பக்கமும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமந்தாவும் டோலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நாக சைத்தன்யாவும் காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்னதாக விவாகரத்து செய்துக்கொண்டனர் . இது ஒட்டுமொத்த திரையுலகிற்கும் அதிர்ச்சியாக இருந்தது.


 






 


குறித்து நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு வெளிப்படையாக பகிர்ந்திருந்தார். அதில் “சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிந்ததை அறிந்ததில் இருந்து தனது மனம் வெதும்பி போய்விட்டேன் , விரைவில் சில விஷயங்கள் சரியாகும் என நம்புகிறேன்.சமந்தாவின் முடிவுதான் இது. அது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. சமந்தாவும் நாக சைத்தன்யாவும் எப்போதுமே எனக்கு பிரியமானவர்கள்தான்.சாயுடன் செலவழித்த நேரங்கள் எப்போதுமே எனது குடும்பத்தினருக்கு இனிமையான தருணங்கள்தான் ” என தெரிவித்திருந்தார். 




இந்த நிலையில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் 7 வருடங்களுக்கு முன்பு இருந்த மெமரியை பகிர்ந்திருக்கிறார். அது சமந்தா மற்றும் நாக சைத்தன்யாவின் திருமண புகைப்படம் . அதனை பகிர்ந்த சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு “   முன்பொரு காலத்தில் நடந்த கதை... ஆனால் அந்த கதை இனி எப்போதுமே இல்லை.. அதனால் மீண்டும் ஒரு புதிய கதையையும்  ..அத்தியாயத்தையும் தொடங்கலாம்“ என தெரிவித்திருக்கிறார்.



இதன் மூலம் நாக சைத்தன்யாவும் சமந்தாவும் பிரிந்ததில், சமந்தாவின் குடும்பத்தினர் கூடுதல் கவலை அடைந்திருக்கின்றனர் என்பதும் அவர்கள் ஒருபோது நாக சைத்தன்யா மீது கொண்ட அன்பை குறைக்கவே இல்லை என்பதும் தெளிவாக புரிகிறது. இந்த புகைப்படங்களை சமந்தா மற்றும் சைத்தன்யா ரசிகர்கள் உருக்கத்துடன் ஷேர் செய்து வருகின்றனர். இதெல்லாம் பழைய கதை நாங்கள் எங்களது வேலையை பார்க்கிறோம் என பிரிந்த காதல் பறவைகள் இரண்டும் கெரியரில் முழு ஈடுபாட்டையும் செலுத்தி வருவதை அண்மை காலமாக பார்க்க முடிகிறது. எது எப்படியோ விவாகரத்து ஆனாலும் ஒருவரை ஒருவர் இப்போதும் வெறுக்கவில்லை என்பதுதான் உண்மை.