தும்மல் ஒரு அனிச்சை செயல். காற்று தவிர வேறு எந்த வெளிப்பொருளும் மூக்கில் நுழைந்தால், நமது மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. அதற்கான அனிச்சைச் செயல்தான் தும்மல். மூக்குத் துவாரத்தில் சிறிய முடியிழைகள், நாம் உள்ளிழுக்கும் காற்றில் கண்ணுக்குத் தெரியாத தூசு, துகள் இருந்தால் அவற்றை வடிகட்டி அனுப்புவதுதான் இவற்றின் வேலை. ஆனால் சிலருக்கு அடுக்கு தும்மல் வரும். அப்படி வருபவர்கள் மருத்துவர்களிடம் முறையான பரிசோதனை செய்து சரியான வேளையில் சரியான சிகிச்சை எடுத்துக் கொள்வது நலம்.
தும்மல் நல்லது..
அது என்னங்க கறை நல்லது மாதிரி சொல்றீங்க என்று கேட்காதீர்கள்> கேட்டாலும் பதில் அதுதான். தும்மல் நல்லது. தும்மல் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்று குஊறுகிறார் ஆஸ்துமா, அலர்ஜி நிபுணர் நெயில் காவ். தும்முவது மூலம் நம் நாசியில் உள்ள பாக்டீரியாக்கள், வைரஸ்கள் க்ளியர் ஆகும் என்று கூறுகிறார் மருத்துவர் காவ்.
புருவம் திருத்துவதால் தும்மல் வரும்
சிலர் புருவத்தை திருத்த அதனை த்ரெடிங் முறையில் சீர் செய்வார்கள். புருவம் திருத்தும்போது சிலருக்கு தும்மல் வரலாம். ஏனெனில் ட்ரைஜெமினல் நரம்புகள் புருவத்தில் இருந்து தொடங்கி மூக்கின் நுனி வரை இருக்கும். அதனால் புருவத்தில் உள்ள ரோமத்தை வெடுக்கென பிடுங்கினால் தும்மல் வரும்.
உடற்பயிற்சி செய்யும்போது தும்மல் வரும்
இன்னும் சிலருக்கு உடற்பயிற்சி செய்யும்போது தும்மல் வரும். இதனை ரைனிடிஸ் சிம்ப்டம் என்பார்கள். உடற்பயிற்சிக்குப் பின்னர் மூக்கில் உள்ள ம்யூக்கஸ் மெம்ப்ரேன் வீங்கி அதனால் தும்மல் வரும். இன்னும் சிலரும் மூக்கில் நீர் வழிதல், மூக்கில் அரிப்பு ஏற்படுதல், கண்ணில் நீர் வழிதல் போன்றவை ஏற்படலாம்.
பாலுறவு கூட தும்மல் வரவழைக்கும்
மூக்கும் பிறப்புறுப்பும் தொடர்பு கொண்டுள்ளது என்றால் நம்புவீர்களா? அதனால் தான் மூக்கை தூண்டினால் பிறப்புறுப்பிலும் தூண்டுதல் ஏற்படுகிறது. சிலருக்கு பாலுறவை நினைத்தாலே மூக்கும் விரைத்துக் கொண்டு மூச்சுத் திணறல் ஏற்படும். இதனால் தும்மல் ஏற்படும்.
தும்மலில் சாதனை
கின்னஸ் சாதனை புத்தகத்தில் அதிகமாக தும்மல் கொண்ட ஒருவர் இடம்பெற்றார். அவருக்கு தும்மல் ஃபிட்ஸ் வந்தது.அது 976 நாட்கள் நீடித்தது. இதேபோல் டோனா க்ரிஃபித்ஸ் என்பவர் தான் இந்த சாதனைக்கு உரியவர். முதல் 365 நாட்களில் மட்டும் அவர் 1 மில்லியன் முறை தும்மியுள்ளார். அடேங்கப்பா என்று ஆச்சர்யப்பட வைக்கிறது அல்லவா இவரது சாதனை.
ஆனால் தும்மல் சில நேரங்களில் அசவுகரியமாகும். அவ்வாறான வேலைகளில் சில விஷயங்களைச் செய்யலாம்.
ஒரு தேக்கரண்டியில் சமையல் உப்பை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் எட்டில் ஒரு பங்கு உப்பை 200 மி.லி. இளம் சூடான தண்ணீரில் கலந்துகொள்ளுங்கள். இப்போது சுத்தமான துணியை அந்தத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்துகொண்டு, திரி போலச் சுற்றிக்கொண்டு, ஒவ்வொரு நாசித் துளையிலும் விட்டு மூக்கைச் சுத்தப்படுத்துங்கள். தும்மல் நிற்கும்.
ஆவி பறக்கும் வெந்நீரில் ‘டிங்சர் பென்சாயின்' மருந்தில் 15 சொட்டுவிட்டு ஆவி பிடித்தாலும், தும்மல் கட்டுப்படும்.
ஸ்டீராய்டு மருந்து கலந்த மூக்கு ஸ்பிரேயை மூக்கில் போட்டுக்கொண்டால், தும்மல் நின்றுவிடும்.
ஆனால் இவை தற்காலிக தீர்வு. அடிக்கடி தும்மல் தொடர்ந்தால் மருத்துவரே சரியான தீர்வைத் தர முடியும்.