நாள்: 10.12.2022


நல்ல நேரம்:


காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


கௌரி நல்ல நேரம்:


காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை





மாலை 9.30 மணி முதல் மாலை 10.30 மணி வரை




இராகு:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


குளிகை:


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


எமகண்டம்:


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை


சூலம் - கிழக்கு


மேஷம்


எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். இறை நம்பிக்கை மனதில் மேம்படும். கனவு தொடர்பான பிரச்சனைகள் குறையும். உறவினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். புதிய துறை சார்ந்த ஆர்வம் மேம்படும். உயர்வு நிறைந்த நாள்.


ரிஷபம்


உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். பெருந்தன்மையான பேச்சுக்களின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். வாகன பயணங்களில் கவனத்துடன் செயல்படவும். செல்வ வளத்தை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பொறுமையுடன் செயல்பட்டு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.


மிதுனம்


சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செல்வாக்கை மேம்படுத்துவதற்காக சில செலவுகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.


கடகம்


வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். எதிர்பாராத சில தடைகளின் மூலம் காலதாமதம் உண்டாகும். ரகசியமான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். எதிலும் தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். விலகி சென்றவர்களை பற்றிய எண்ணங்கள் மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது நல்லது. பொறுமை வேண்டிய நாள்.


சிம்மம்


உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். இறை வழிபாடு தொடர்பான எண்ணங்கள் கைகூடும். ஆபரணங்களின் மீதான முதலீடுகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புகழ்ச்சிகளுக்கு செவி சாய்க்காமல் இருக்கவும். விவேகமான செயல்பாடுகளின் மூலம் முன்னேற்றத்தை உருவாக்கி கொள்வீர்கள். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். போட்டிகள் நிறைந்த நாள்.


கன்னி


எதிலும் திருப்தியற்ற மனநிலை உண்டாகும். அரசு சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். சங்கம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். விளையாட்டு போட்டிகளில் பொறுமையுடன் செயல்படவும். வியாபார பணிகளில் திறமையுடன் செயல்படுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு காண்பீர்கள். சலனம் நிறைந்த நாள்.


துலாம்


உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். இயற்கை சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். சர்வதேச வணிகத்தில் முயற்சிக்கு ஏற்ப லாபம் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


விருச்சிகம்


உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சலும், பொறுப்பும் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களின் மூலம் காலதாமதம் ஏற்படும். தாய்மாமன் வழியில் அனுசரித்து செல்லவும். நெருக்கமானவர்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். எதிர்பாராத சில நெருக்கடிகளால் கடன் வாங்குவதற்கான சூழ்நிலைகள் அமையும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். கவனம் வேண்டிய நாள்.


தனுசு


சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பாலின மக்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பயணங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கி எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உணவு சார்ந்த பணிகளில் லாபம் அதிகரிக்கும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். விவாதங்களின் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அமைதி நிறைந்த நாள்.


மகரம்


சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். பயணங்கள் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். சேவை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய சொத்துக்களை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிர்பார்த்த சில தனவரவின் மூலம் நெருக்கடிகள் குறையும். உடனிருப்பவர்களிடம் கர்வமின்றி செயல்படவும். குழப்பம் விலகும் நாள்.


கும்பம்


தந்தையின் ஆதரவின் மூலம் பயனடைவீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார பணிகளில் உள்ள சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் திருப்திகரமான சூழ்நிலைகள் ஏற்படும். பகுத்தறிவுடன் செயல்பட்டு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கி கொள்வீர்கள். பாரம்பரியம் தொடர்பான தேடல் உண்டாகும். அசதி நிறைந்த நாள்.


மீனம்


கல்வி பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். உங்களின் மீதான வதந்திகளுக்கு முடிவு பிறக்கும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். தவறிப்போன சில பொருட்களை பற்றிய தடயங்கள் கிடைக்கும். புத்திசாலித்தனத்தை வளர்த்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். செலவுகள் குறையும் நாள்.