Health: சுடு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் 5 பலன்கள் என்னென்ன..?

சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு மனிதர் 2.5 லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும் என்று கூறப்படுகிறது. வெதுவெதுப்பான நீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

Continues below advertisement

தண்ணீர் உயிருக்கு ஆதாரம். சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு மனிதர் 2.5 லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டாம் என்று கூறப்படுகிறது. வெதுவெதுப்பான நீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

Continues below advertisement

சீரான செரிமானம், உடல் எடை குறைத்தல் மற்றும் தொண்டை வலி ஆகியவற்றை குணப்படுத்துவதற்ககு மிதமான சுடுநீரை பருகுமாறு, ஒரு முறையேனும் பரிந்துரைக்கப்பட்டிருப்போம்.  ஏன் அவ்வாறு பரிந்துரைக்கிறார்கள்? என்பதைப் பார்ப்போம்.

மூக்கடைப்பு நீங்க: 

மூக்கடைப்பு நீங்க வெதுவெதுப்பான தண்ணீரை அருந்தினால் சிறந்த பலன் கிடைக்கும். சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரை அருந்தினால் அதிலுள்ள ஆவி மூக்கில் உள்ள மியூகஸ் மெம்ப்ரேனில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை நீக்கும். எளிதாக சுவாசிக்க முடியும். தலைவலி நீங்கும். ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீர் மூக்கொழுகுதலை நிறுத்தும். இருமல், தொண்டை வலிக்கு இதம் தரும்.
 
செரிமானம்:

நீங்கள் என்றைக்காவது அதிகமாக உணவருந்திவிட்டதாக உணர்ந்தால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள். வெதுவெதுப்பான நீர் என்பது நீங்கள் உண்ட உணவு சீக்கிரமாக கரைய உதவும். 2016ல் தேசிய மருத்துவ நூலகத்தில் ஒரு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அது வெதுவெதுப்பான நீர் குடல் சீராக இயங்க உதவுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் வயிற்றில் தேங்கும் காற்றை அப்புறப்படுத்த வெதுவெதுப்பான நீர் உதவுகிறது.

சிலருக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படலாம். மலச்சிக்கல் ஏற்படக் காரணம் உடலில் போதிய நீர்ச்சத்து இல்லாமையே. அதனால். மலச்சிக்கல் நீங்க போதிய அளவு வெதுவெதுப்பான நீர் அருந்த வேண்டும். இது குடல் இயக்கத்தை சீராக்கும்.

மன அழுத்தம்:

மன அழுத்தம் குறைய வெதுவெதுப்பான நீர் அருந்தலாம். ஏனெனில் அது மத்திய நரம்பு மண்டலத்தை சீராக்கும். இதனால் உங்களால் மன அழுத்தமின்றி ரிலாக்ஸாக உணர முடியும். போதிய நீர்ச்சத்து இருந்தால் அது மனதை இலகுவாக்கும். 

உடல் நடுக்கம்:

குளிர் காலத்தில் நம் உடல் நடுங்கக் கூடும். அதுமாதிரியான வேளையில் சுடு தண்ணீர் அருந்தினால் அது நடுக்கத்திலிருந்து விடுதலை தரும்.வெந்நீர் அருந்தும்போது, அது உணவுப் பொருட்களை எளிதில் செரிமானம் செய்து, வெளியேற்ற உதவுகிறது. வெந்நீர் அருந்தும்போது, ரத்தக் குழாய்கள் விரிவுபடுத்தப்படும். இதனால், உடல் முழுக்க நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். செல்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன் சீராகக் கிடைக்கும். 

இதுமட்டுமல்ல, வெந்நீர் அருந்துவதால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். உயர் ரத்த அழுத்தம், கீழ் வாதம், மன அழுத்தம் போன்றவை கட்டுப்படும். உணவு மண்டலம், சிறுநீரகம் தொடர்புடைய நோய்கள் குணமாகும். சுவாச மண்டலம், நுரையீரல், இதயம், மூளை போன்றவற்றில் உள்ள கோளாறுகள் சரியாகும்.

சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால் வாயுத் தொல்லை வராது அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி தடைப்படும். வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது. 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement
Sponsored Links by Taboola