நாள்: 21.12.2022
நல்ல நேரம்:
காலை 9.00 மணி முதல் காலை 10.00 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
கௌரி நல்ல நேரம்:
மதியம் 1.45 மணி முதல் மதியம் 2.45 மணி வரை
மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை
இராகு:
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
குளிகை:
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
எமகண்டம்:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
முன்கோபத்தால் சில மனக்கசப்புகள் ஏற்படும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். மனதில் இனம்புரியாத பயம் மற்றும் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். எந்தவொரு செயலிலும் திருப்தியற்ற சூழல் உண்டாகும். எதிர்பார்த்த ஒப்பந்தம் காலதாமதமாக கிடைக்கும். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். நட்பு நிறைந்த நாள்.
ரிஷபம்
சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களிடத்தில் உங்களின் மீது மதிப்பு அதிகரிக்கும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். முயற்சிக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் அமையும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வர்த்தகம் தொடர்பான வெளியூர் பயணங்கள் கைகூடும். நிறைவான நாள்.
மிதுனம்
நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத தனவரவின் மூலம் திருப்தி ஏற்படும். நெருக்கமானவர்களுக்கு சில உதவிகளை செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். முக்கியமான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். பெரியோர்களின் ஆசி கிடைக்கப் பெறுவீர்கள். ஆன்மிகம் மற்றும் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமாக வெளிவட்டாரங்களில் நட்பு வட்டம் விரிவடையும். ஆர்வம் அதிகரிக்கும் நாள்.
கடகம்
பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். பணி தொடர்பான கோப்புகளை கையாளும் பொழுது கவனம் வேண்டும். கூட்டுத்தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். எதிர்பார்த்த வெளியூர் தொடர்பான உதவி கிடைக்கும். வியாபாரத்தில் உள்ள சில நுணுக்கமான விஷயங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் நிதானத்துடன் செயல்படவும். ஆக்கப்பூர்வமான நாள்.
சிம்மம்
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்களுடன் பேசும் பொழுது பொறுமையுடன் செயல்படவும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவதற்கான சூழல் அமையும். தாயாரின் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். சோர்வு நிறைந்த நாள்.
கன்னி
உங்களின் தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். மனதில் புதுவிதமான இலக்கினை நிர்ணயம் செய்வீர்கள். எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு லாபம் அடைவீர்கள். கற்பனை தொடர்பான துறைகளில் ஆதாயம் உண்டாகும். தொலைபேசி வாயிலான செய்திகளின் மூலம் பயணங்களை மேற்கொள்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பாகப்பிரிவினை தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
துலாம்
மனதளவில் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். மனை சார்ந்த விஷயங்களின் மூலம் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தடைகள் விலகும் நாள்.
விருச்சிகம்
புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். வியாபார பணிகளில் புதிய முதலீடுகள் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். மனதில் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படவும். பயணங்களின் மூலம் உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல்கள் அதிகரிக்கும். உறவினர்களிடத்தில் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். உத்தியோக பணிகளில் அனுசரித்து செல்லவும். போட்டிகள் நிறைந்த நாள்.
தனுசு
பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் இருந்தாலும் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை மேற்கொள்வீர்கள். சகோதரர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு சார்ந்த வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு மேம்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.
மகரம்
உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்வீகம் சம்பந்தமான விரயங்கள் உண்டாகும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு கிடைக்கும். சாதுரியமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். பொருட்சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விவேகம் வேண்டிய நாள்.
கும்பம்
மனதில் வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கோபத்தை குறைத்து கொண்டு நிதானத்துடன் செயல்படவும். வெளிவட்டாரங்களில் இருந்து புதுவிதமான அனுபவம் கிடைக்கும். பழைய நினைவுகளால் மனதில் அமைதியின்மை ஏற்படும். பரிவு வேண்டிய நாள்.
மீனம்
சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பக்தி நிறைந்த நாள்.