கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவானது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலுடன் தவறாக இணைக்கப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிப்பா?:
மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பலர் போலி வீடியோக்களை தயாரித்து பரப்புவதை அதிகமாக பார்க்க முடிகிறது. இந்நிலையில், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆராயப்பட்டது. இந்த வீடியோவானது 2012 ல் எடுக்கப்பட்டது என்றும், கேரள மாணவர் சங்கத்தின் (KSU) உறுப்பினர்கள் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தரின் உருவ பொம்மையை எரிப்பதையும் காட்டுகிறது. நீல நிறக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு ஒன்று உருவ பொம்மையை எரிக்கும் வீடியோ காட்டுகிறது. அப்போது திடீரென்று போராட்டக்காரர்களின் ஆடைகளில் தீ பரவி அவர்களின் காலாடையை எரித்தது.
இணையத்தில் பரவும் வீடியோவின் ஸ்க்ரீன் ஷாட்..
வைரல் வீடியோ:
இந்நிலையில், வீடியோவை பகிர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளதாவது, பிரதமர் மோடியின் உருவ பொம்மையை தீ வைத்ததால், தீ வைத்தரின் காலில் தீ பற்றி காயம் ஏற்பட்டது. மோடி நெருப்பு, அவருடன் மோத நினைத்தால் உங்களுக்குத்தான் ஆபத்து என குறிப்பிட்டிருக்கிறார்.
இந்நிலையில், பலரும் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவானது, போலியானது என கண்டறியப்பட்டது. எனவே , இந்த வீடியோவை யாரும் பரப்ப வேண்டாம் என தெரிவித்து கொள்கிறோம்.
இணையத்தில் பரவும் வீடியோவின் ஸ்க்ரீன் ஷாட்..
பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக BOOM என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை தமிழில் மொழிபெயர்த்து எழுதியுள்ளது.