கங்கனாவை அறைந்த CISF அதிகாரி குல்விந்தர் கவுர் ராகுல் காந்தியுடனும், சோனியாகாந்தியுடனும் நிற்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


”இவள்தான் குல்விந்தர் கவுர். இவள்தான் கங்கனா ராவத்தை கன்னத்தில் அறைந்தவள்.. இப்போது தெரிகிறதா யார் மூலகாரணம் என்று” என்று இந்த புகைப்படம் வைரலாகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.




கங்கனாவை அறைந்த CISF காவலர் குல்விந்தர் கவுர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸாருடன் நிற்பதாகப் பரவும் புகைப்படச்செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.


 வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த பிப்ரவரி 14, 2024 அன்று ராஜஸ்தான் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏவான திவ்யா மதர்னா, “Welcomed Mr. Rahul Gandhi and Mrs. Priyanka Gandhi who came along. Priyanka Gandhi Vadra Rahul Gandhi” என்று இப்புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்திருப்பதை நம்மால் காண முடிந்தது.


 



திவ்யா மதர்னா ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் சோனியாகாந்தியுடன் இருக்கும் இப்புகைப்படத்தை எடுத்தே தற்போது கங்கனா கன்னத்தில் அறைந்த CISF வீரர் குல்விந்தர் கவுர் என்று பரப்பி வருகின்றனர் என்பது நமக்குத் தெளிவாகியது.


மேலும், திவ்யா தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில், “BJP IT cells do not miss a moment to introduce its crooked mentality. Posting one of my photo with false facts in Rajasthan assembly from yesterday onwards in Rajasthan assembly nomination of respected Mrs. Sonia Gandhi ji, presenting me as CISF jawan Kulvindra Kaur to dust the image of respected Gandhi family Effort is there.” என்று குறிப்பிட்ட தனது புகைப்படம் போலியாக பரவி வருகிறது என்று விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 



கங்கனாவை அறைந்த CISF காவலர் குல்விந்தர் கவுர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸாருடன் நிற்பதாகப் பரவும் புகைப்படச்செய்தி போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.


ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.


பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Newschecker என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தியை சற்றே திருத்தி எழுதியுள்ளது.