Fact Check: மெட்ரோ சேவையை மேம்படுத்திய பிரதமர் மோடி என்ற பாஜகவின் சமூக வலைதள பதிவில், சிங்கப்பூர் மெட்ரோவின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 


இணையத்தில் பரவும் புகைப்படம்:


இந்தியாவின் மெட்ரோ ரயில் சேவையை மேம்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடியின் பங்களிப்பு என குறிப்பிட்டு, மேற்கு வங்க பாஜக ஒரு போஸ்டரை ட்வீட் செய்துள்ளது. அதில் மோடியின் புகைப்படத்திற்கு பின்புலத்தில் உயரடுக்கு மெட்ரோ ரயில் சேவை தொடர்பான ஒரு புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த பதிவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.


இதையடுத்து, பாஜகவின் போஸ்டரில் பயன்படுத்தப்பட்ட புகைப்படம் உள்நாட்டில் இருக்கும் மெட்ரோ ரயில் அல்லது மெட்ரோ ரயில் பாதையின் புகைப்படம் அல்ல. சிங்கப்பூரில் உள்ள ஒரு மெட்ரோ ரயில் சேவை தொடர்பான புகைப்படம் தான் இது என சமூக வலைதள கருத்துரை பெட்டியில் பலரும் குறிப்பிட்டு இருந்தனர்.




           சிங்கப்பூர் நாளிதழில் வெளியான புகைப்படம்


உண்மைத்தன்மை என்ன?


பாஜகவின் போஸ்டர் வைரலான நிலையில், குற்ப்பிட்ட படத்தைப் ரிவர்ஸ் இமேஜ் முறையில் கூகுளில் தேடினோம். அந்த முயற்சி சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் பிப்ரவரி 13, 2020 தேதியில் வெளியிட்ட கட்டுரைக்கு எங்களை அழைத்துச் சென்றது. அதில் பாஜகவின் போஸ்டரில் இருப்பதை போன்ற, ஆனால் பெரிதாக்கப்பட்ட மெட்ரோ ரயில் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. அந்த கட்டுரையில், ” சோவா சூ காங் எம்ஆர்டி மற்றும் ஜூரோங் ஈஸ்ட் எம்ஆர்டி நிலையங்களுக்கு இடையேயான மெட்ரோ ரயில் பயணத்திற்கான நேரம், சுமார் 20 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டு இருந்தது. 




           சிங்கப்பூர் மெட்ரோ புகைப்படம்


மேலும் தொடர்புடைய கீ வேர்ட்களை கொண்டு தேடியபோது "NS1 EW24 Jurong East MRT" என்ற தலைப்புடன் கீழே வழங்கப்பட்டுள்ள விக்கிமீடியா காமன்ஸ் படத்தை எங்களால் அணுக முடிந்தது.  மார்ச் 7, 2024 தேதியிட்ட Yahoo ஃபைனான்ஸ் கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட இதேபோன்ற புகைப்படத்தை கீழே காணலாம். இதைஅ ஜூரோங் லைன் என்று அழைக்கலாம்.


இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அது ஒன்றுதான் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஜூரோங் ஈஸ்ட் எம்ஆர்டி நிலையம், சிங்கப்பூரின் ஜூரோங் ஈஸ்டில் உள்ள ஒரு உயரமான பெரிய உயரடுக்கு நிலையமாகும். இது சிங்கப்பூரின் ரயில் ஆபரேட்டரான SMRT ரயில்கள் லிமிடெட் மூலம் இயக்கப்படுகிறது.




   பாஜக போஸ்டர் & சிங்கப்பூர் மெட்ரோ புகைப்படங்கள் ஒப்பீடு


தீர்ப்பு:


நாம் மேற்கொண்ட தேடல்கள் மூலம் பாஜகவின் போஸ்டரில் இருப்பது இந்தியாவில் உள்ள மெட்ரோ ரயில் தொடர்பானது இல்லை எனவும், அது சிங்கப்பூர் மெட்ரோ தொடர்பான புகைப்படம் என்பது உறுதியாகியுள்ளது.


பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Newschecker என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை மொழிமாற்றம் செய்து சற்றே திருத்தி எழுதியுள்ளது.