ஜப்பானை தாக்கிய சுனாமி.. வைரலாகும் பரபர வீடியோ.. நடந்தது என்ன?

ஜப்பானில் சுனாமி தாக்கியுள்ளதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதன் உண்மைத்தன்மை குறித்து தெரிந்து கொள்வோம்.

Continues below advertisement

“2025ல் ஜப்பானை சுனாமி தாக்குவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்பு” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. ஜப்பானில் 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் கடந்த மார்ச் 11ஆம் தேதி அனுசரிக்கப்பட்ட நிலையில் இக்காணொலி பகிரப்பட்டு வருகிறது. 

Continues below advertisement

Fact-check:

நியூஸ்மீட்டர் நடத்திய ஆய்வில் வைரலாகும் காணொலி 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.

இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, 2011ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி வைரலாகும் அதே காணொலி Haber Turk என்ற துருக்கி மொழி இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அதில், “ஜப்பானில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 
மேலும், ANNnewsCH என்ற ஊடகத்தில் வைரலாகும் அதே காணொலியின் மற்றொரு கோணக் காட்சி “Tsunami, Great East Japan Earthquake - Miyako city, Iwate Pref, Japan [11 Mar 2011]” என்ற தலைப்புடன் பதிவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரலாகும் காணொலி ஜப்பானில் 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது எடுக்கப்பட்டது என்று தெரிய வருகிறது.
 
தொடர்ந்து, கிடைத்த தகவலைக் கொண்டு யூடியூபில் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2011 Japan Tsunami Archives என்ற யூடியூப் சேனலில் Miyako City Hall-லில் 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் முழு நீளக்காணொலி என்று வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது.
முடிவாக, நம் தேடலில் 2025ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி 2011ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியின் போது எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.
 
பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக News Meter என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை மொழி பெயர்த்து எழுதியுள்ளது.
 
Continues below advertisement
Sponsored Links by Taboola