மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு இஸ்லாமியர்களை காவல்துறையினர் தாக்கும் சம்பவத்தின் காணொளி ஒன்று நாக்பூரில் நடந்ததாக பரவும் பதிவுகளில் உண்மை இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.


சுமார் 45 நொடிகள் நீளும் இந்த காணொளியில், இஸ்லாமியர்கள் இருவர் மீது காவல்துறையினர் கடுமையாக தடியடி நடத்துகிறார்கள். ஃபேஸ்புக்கில் இந்த காணொளியை பகிர்ந்த ஒரு பயனர், “திங்கள்கிழமை நாக்பூரில் மசூதியிலிருந்து தொழுகை முடிந்து வெளியே வந்த மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.”, என்ற தகவலுடன் பதிவிட்டுள்ளார்.


கடந்த மார்ச் 17 ஆம் தேதியன்று மகாராஷ்ட்ராவில் அவுரங்சீப் கல்லறையை அகற்ற கோரி இந்துத்துவா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, அங்கு வகுப்புவாத கலவரம் ஏற்பட்டது. இந்நிலையில், நாக்பூரில் இந்த காணொளி எடுக்கப்பட்டதாக சமூக ஊடகத்தில் பகிரப்பட்டது. 


உண்மைச் சரிபார்ப்பு:


இந்த காணொளியின் உண்மைத்தன்மையை சரிபார்க்க, காணொளியின் சில பிரேம்களை எடுத்து, நாங்கள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தோம். இந்த தேடுதல், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் எக்ஸ் கணக்கிற்கு கொண்டு சென்றது.


கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதியன்று பகிர்ந்துள்ள அவரது பதிவில், ”காவல்துறையினர் இந்த இளைஞர்களை அடித்து துன்புறுத்துகிறார்கள். இந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


 






மேலும், இந்த காணொளி எங்கு, எப்படி நடந்தது என்ற செய்தியுடன் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் கார்கோன் என்ற பகுதியில், ராம நவமி கொண்டாட்டங்களின்போது நடந்த வன்முறையை தொடர்ந்து பல இஸ்லாமிய இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கலவரம் கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதியன்று நடந்தது.


இதன்மூலம், இந்த காணொளி நாக்பூரில் எடுக்கப்பட்டது அல்ல என்பது உறுதிச்செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மத்திய பிரதேசத்தில் நடந்த கலவரம் குறித்து நாங்கள் கூகுளில் தேடினோம். அப்போது, இந்தியா டூடே இணையதளத்தில் இந்த கலவரம் குறித்து செய்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் செய்தி வெளியிட்டிருந்தது.


மேலும், பிராசந்த் பூஷண் பகிர்ந்த செய்தி காணொளியில்,’Maktoob Media’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மத்திய பிரதேச வன்முறை, Maktoob media போன்ற குறிப்பிட்ட சில வார்த்தைகள் கொண்டு நாங்கள் கூகுளில் தேடியபோது, அதே காணொளி கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் தேதியன்று இந்த ஊடகத்தின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளது.


அதே டிஸ்கிரிப்ஷன் பகுதியில் official_rajthakur__ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஐடி குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை ஆய்வு செய்கையில் அவர் தன்னை டெல்லியைச் சேர்ந்த யூடியூபர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து காணொலிகளும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் இக்காணொலிகள் ஸ்கிரிப்ட் செய்யப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Conclusion:


முடிவாக, நம் தேடலில் இஸ்லாமியர் ஒருவர் தனது மகளையே திருமணம் செய்து கொண்டதாக வைரலாகும் காணொலி ஸ்கிரிப்ட் செய்யப்பட்டது என்றும் அது பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.



பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக BOOM என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை மொழி பெயர்த்து எழுதியுள்ளது.