ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவரான சினேகா திடீரென கண்கலங்கி அழுதார். அவர் அழுததற்கான காரணம் என்ன தெரியுமா?
அழுகைக்கான காரணம்..
செட்டுக்கு திடீரென வருகை தந்த சினேகாவின் அம்மா. அம்மாவை செட்டில் பார்த்தவுடன் ஆச்சர்யத்தில் வாயைப் பொத்தி அசையாமல் சில நொடிகள் இருந்த சினேகா திடீரென கண்ணீர் சிந்த ஆரம்பித்தார்.
அப்புறம் கேமரா பேன் ஆன பின்னர் தான் அவரின் அழுகைக்குக் காரணம் அங்கு வந்திருந்த அவரது தாயார் என்பது தெரியவந்தது. அம்மாவைப் பார்த்து எமோஷனலான சினேகா குழந்தைபோல் ஓடிப்போய் அவரைக் கட்டிக் கொண்டார். பின்னர், இருக்கைக்கு வந்து உட்கார்ந்தார். அப்போது சினேகாவின் அம்மா பேசினார். என் பொண்ணு ரொம்ப ஸ்பெஷல். அவள் ஒரு பாசக்காரி. அவள் கடவுள் கொடுத்த வரம். திட்டினாலும் உடனே ஜாலியாகிடுவான்னு சொல்ல சினேகா அவரைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க அரங்கமே எமோஷலானது.
அம்மா இந்த மாதிரி எந்த ஒரு ஷோவுக்கும் வரமாட்டாங்க. அம்மாவுக்கு நிறைய உடல் உபாதை இருக்கு. கழுத்து வலி, முதுகு வலி இருக்கு. நிறைய சர்ஜரி பண்ணியிருக்காங்க. என் அம்மா தான் என்னோட எல்லா நேரத்திலையும் கூட இருந்தாங்க. அம்மா செம்ம க்யூட்டான ஆள். இப்போ டாட்டூ போட்டுகிட்டாங்க. அப்போ பண்ண முடியாத நிறைய விஷயங்களை இப்போ பண்றாங்க. அம்மாவும் என் குழந்தைகள் வியான், ஆத்யாங்கா அவ்வளவு பெஸ்ட் பிரண்ட்ஸ். அவர்கள் விளையாட்டு எல்லாமே செம்ம க்யூட் என்றார். மேலும் அப்பா துபாயில் இருந்தப்ப அம்மா எப்படியெல்லாம் தங்களைப் பார்த்துக்கிட்டாங்க என்பதையும் பற்றி சினேகா பேசினார்.
சர்ச்சையில் சிக்கிய ஷோ..
ஒருவழியாக, ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஆனால், இந்த ஷோ சர்ச்சையில் சிக்கியதை யாரும் மறக்க முடியாது.
தமிழில் ஒளிபரப்பாகும் சேனல்களில் ஜீதமிழ் மிகப்பிரபலமான சேனல். இந்த சேனலில் சீரியல் மட்டுமில்லாமல் பாடல் பாடுவது, குழந்தைகள் காமெடி என்று பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. என்று வகையில் தற்போது ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’ என்ற குழந்தைகள் காமெடி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக சினேகா, மிர்ச்சி செந்தில், பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா நடுவராக இருக்கிறார்கள்.
இந்நிகழ்சியில் ஒருமுறை பிரதமர் மோடி, மத்திய அரசை கிண்டல் செய்வது போல் ஒரு காமெடி ஷோ சிறுவர்களால் அரங்கேற்றப்பட அதற்கு கண்டனக் குரல்கள் எழுந்ததை மறக்க முடியாது.