தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடர் அண்ணா. அண்ணன் - தங்கை சென்டிமென்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த தொடர் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் சண்முகம் சூடாமணியை கொல்ல வந்தவனை காப்பாற்றிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்ற விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது. இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.
உண்மையை அறிந்து கொண்ட கொலைகாரன்:
போட்டோகிராபர் உயிர் பிழைத்ததைப் பார்த்த சூடாமணி மகிழ்ச்சி அடைகிறாள். நல்லவேளை உனக்கு எதுவும் ஆகலப்பா என்று சந்தோசமாக பேச அதை பார்த்த அவன், கொல்ல வந்தவனே சாக கூடாதுனு நினைக்கிறாங்கனு உணர்ச்சி வசப்படுகிறான். பிறகு அவனை வீட்டிற்கு அழைத்து வர, சிவபாலன் உள்ளிட்டோர் அடிக்க முயற்சிக்கின்றனர். அப்போது, அவர்களைத் தடுத்து நிறுத்திய ஷண்முகம் அவன் இப்படி வந்து நிற்கிறானா அதுக்கு காரணம் உன் அப்பன் தான் என்று சொல்ல முத்துப்பாண்டி அதிர்ச்சி அடைகிறான்.
உன் அப்பா கொலையை பண்ணிட்டு என் அம்மா மேல பழியை போட்டு தப்பிச்சிட்டான் என்று சொல்ல, கொல்ல வந்தவன் உண்மை அறிந்து மன்னிப்பு கேட்கிறான். இதைத்தொடர்ந்து திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடக்க, சூடாமணியை பெண்கள் ஒருபுறமும், வைகுண்டத்தை ஆண்களும் மறுபுறமும் அலங்கரிக்கின்றனர்.
ஷாக்:
அடுத்து சூடாமணி வைகுண்டத்தை உட்கார வைத்து சாப்பாடு பரிமாற, மாமா முறை பையன் தான் உட்காரனும் என்று சொல்ல முத்துப்பாண்டி உட்காரலைனா என்ன? நான் உட்காருறேன் என்று சிவாபாலன் உட்கார போக அவனை எட்டி உதைத்து சௌந்தரபாண்டி வந்து உட்கார அனைவரும் ஷாக் ஆகின்றனர்.
மச்சான் பக்கத்துல நான் தானே உட்காரனும் அதான் தப்பித்து வந்தேன் என்று சொல்ல ஷாக் ஆகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்