சின்னத்திரை சீரியல்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. இப்போது பல்வேறு சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வரும் நிலையில் சீரியல் ரசிகர்களுக்கோ ஏராளமான சாய்ஸ் உள்ளன. அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.


இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அம்மாவை அவமானப்படுத்தியதால் சக்தி ரங்கநாயகியிடம் வந்து என் அம்மாவை அவமானப்படுத்தி விட்டீர்கள் பூஜாவின் சொல் கேட்டு இப்படி நடந்து கொள்ளாதீர்கள் என்று கோபமாக ரங்கநாயகியிடம் பேசிவிட்டு போகிறாள்.


சக்தி போனதும் பூஜா தன்னைத்தானே கன்னத்தில் அறைந்து கொண்டு ரங்கநாயகியிடம் சென்று சக்தி அடித்து விட்டால் என்று பொய் சொல்கிறாள்.சக்தி உங்களை மீனாட்சியிடம் மன்னிப்பு கேட்க சொன்னாள் அப்படி கேட்கவில்லை என்றால் உங்களையும் வெற்றியையும் பிரித்து விடுவேன் என்று சொல்லிவிட்டு போனதாக பூஜா பொய் சொல்கிறாள். உடனே ரங்கநாயகி மீனாட்சிக்கு போன் செய்து சக்தி இங்கு வந்து தகராறு செய்துவிட்டு போனதையும் மன்னிப்பு கேட்க சொன்னதையும் கூறுகிறாள். மீனாட்சி இது எல்லாம் எனக்கு தெரியாது என்று கூற,நீ நன்றாக நடிக்கிறாய் என்று ரங்கநாயகி மீனாட்சியை திட்டுகிறாள்.வெளியில் சென்ற சக்தி வீட்டிற்கு வர ,மீனாட்சி சக்தியை நிறுத்தி நீ ரங்கநாயகியிடம் சென்று ஏன் பிரச்சனை செய்தாய் உன்னையும் வெற்றியையும் சேர்த்து வைக்க வேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுகிறேன் என்று கூறி நீ ரங்கநாயகியிடம் சென்று மன்னிப்பு கேள் என்று சக்தியிடம் சொல்கிறாள்.


சக்தி நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறி மன்னிப்பு கேட்க மறுக்க ,மீனாட்சி செய்வதறியாமல் சாமியின் படத்தைப் பார்த்து கை கூப்பி கும்பிட்டுக் கொண்டு அழுகிறாள்.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


மேலும் படிக்க


Rajasthan Election 2023: ராஜஸ்தான் தேர்தல் வாக்குப்பதிவு - பிற்பகல் 01.00 மணி வரையிலான நிலவரம் என்ன?


Actress Khushbu: “சேரி” வார்த்தையை பயன்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது - நடிகை குஷ்பூ திட்டவட்டம்


Annamalai vs Mano Thangaraj: ’ மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கர் பரம்பரை அல்ல ‘ - அண்ணாமலைக்கு பதில் கொடுத்த அமைச்சர் மனோ தங்கராஜ்..


 


Car loan Information:

Calculate Car Loan EMI