அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் அமுதாவை அவமானப்படுத்த வடிவேலும், சின்னாவும் திட்டமிடும் காட்சிகள் இடம் பெறுகிறது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர்.
இதுவரை நடந்தது என்ன?
நேற்றைய எபிசோடில் செந்தில் சாப்பிட்ட இலையில் அமுதா சாப்பிடாதது பிரச்சினையாக எழுகிறது. இதனால் அப்பத்தாவிடம், அமுதாவின் உணர்வுகளுக்கு என்றுமே தான் மதிப்பளிப்பேன் என செந்தில் சொல்கிறான். இதனைத்தொடர்ந்து அனைவரிடமும் செந்தில் செய்தது தான் சரி என அப்பத்தா சொல்கிறார். இதனால் அமுதா சந்தோஷமாக, உமாவும் நாகுவும் கடுப்பாகின்றனர். இதனையடுத்து உமா அப்பத்தாவிடம் அமுதாவும் செந்திலும் ஒரே ரூமில் இருக்க மாட்டார்கள் என சொல்கிறார். உடனே அவரோ ஒரு ரூமை காட்டி அங்கே இருவரையும் தங்க சொல்கிறார். அதற்கு அமுதா மறுக்க, செந்தில் தாத்தா நம்ம மேல சந்தேகத்துல தான் இருக்காரு என சொல்கிறார். இதனையடுத்து கண்டிஷன்களுடன் இருவரும் தூங்குகின்றனர்.
பின்னர் வடிவேலு சின்னாவிடம், நம்ம ரெண்டு பேரும் குடிச்சிட்டு வந்து ரகளை பண்ணுவோம் என சொல்கிறார். அனைவரும் கோயிலுக்கு வர கோயில் சுத்தம் செய்யப்படாமல் இருக்கிறது. இதனால் உமா பழனியிடம் கோயிலை கிளீன் பண்ண ஆட்களை வரச் சொல்கிறார். அப்போது அன்னலட்சுமி அவங்க வரலைன்னா என்ன, இது நம்ம கோவில், நாம சுத்தம் செய்வோம் என சொல்கிறாள். உடனே செந்தில், அமுதா, மாணிக்கம், அமுதா நால்வரும் சேர்ந்து கோவிலை சுத்தம் செய்கிறார்கள். இதனையடுத்து உமா அப்பத்தாவிற்கு போன் செய்து அமுதா குடும்பம் கோவிலை சுத்தம் செய்வது பற்றி சொல்லி நக்கலாக சிரிக்கும் காட்சிகள் இடம் பெற்றது.
இன்றைய எபிசோட் அப்டேட்
இன்றைய எபிசோடில் அப்பத்தா வந்து கோயிலை பார்க்க, கோயில் சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. அப்போது விளக்கு ஒன்று அணையப் போக, அமுதாவும் அன்னலட்சுமியும் ஓடி வந்து கைகளால் கொண்டு அணையாமல் பார்த்துக் கொள்கின்றனர். இதனை தொடர்ந்து நாகு அமுதா குடும்பத்தைப் பற்றி நக்கலாக சொல்ல, அப்பத்தா நாகுவை கன்னத்தில் அறைகிறார். பின்னர் உமாவிடம், வடிவேலுவும், சின்னாவும் வரட்டும் அதுக்கப்புறம் என்ன நடக்குதுன்னு பாரு என பழனி சொல்கிறான்.
மறுபக்கம் கோவிலில் பூஜை ஆரம்பிக்கப்போகிறது. அப்போது உமா அப்பத்தாவிடம், அமுதா வீட்டுல இருந்து வடிவேலு, சின்னா ரெண்டு பேரும் வந்துதும் ஆரம்பிக்கலாம் என சொல்கிறார். அந்நேரம் அனைவரும் காத்துக் கொண்டிருக்க, கார் ஒன்று வருகிறது. அதிலிருந்து சின்னா, வடிவேலு இருவரும் நெத்தி நிறைய திருநீறுடன் இறங்க உமா, பழனி அதிர்ச்சி அடைகிறார்கள். பின்னால் செல்வா இறங்குகிறான். பிளாஸ்பேக்கில் சின்னா, வடிவேலு இருவரும் குடித்து விட்டு தள்ளாடியபடியே வண்டியை ஓட்டி வருகிறார்கள். அப்போது செல்வா கார் மீது இவர்களது கார் மோதி விட, விஷயம் அறிந்து செல்வா இவர்களை அடித்து போதையை தெளிய வைத்தது தெரிய வருகிறது.