இயக்குநர் பா. ரஞ்சித்துடன் விரைவில் இணைய இருப்பதாக யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான படைப்புகளால் கவனம் பெற்றவர் இயக்குநர் பா. ரஞ்சித். தலித் அரசியலை அச்சமின்றி சினிமாவில் துணிச்சலாக முன்னெடுத்தவர். இவர் எடுத்த ‘அட்டக்கத்தி’ ‘மெட்ராஸ்’ ‘கபாலி’ ‘காலா’ ‘சார்ப்பட்டா பரம்பரை’ ‘தம்மம்’ ‘ நட்சத்திரம் நகர்கிறது’ என அனைத்துமே சமூகத்தில் விவாதத்தை எழுப்பியவை.
ஆகையால் இவரின் படங்களுக்கு எப்போதுமே எதிர்பார்ப்பு நிலவும். இவரின் முன்னெடுப்பில் ஒவ்வொரு ஆண்டு மார்கழி மாதம் ‘மார்கழியில் மக்களிசை’ என்ற நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டிற்கான மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி அண்மையில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா கலந்து கொண்டார். அப்போது பேசிய யுவன்ஷங்கர் ராஜா, “ பா.ரஞ்சித்துடன் தான் விரைவில் இணைந்து பணியாற்ற இருக்கிறேன்” என்று தெரிவித்து இருக்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் தொடக்க காலப் பாடல்கள் அனைத்தும் இன்று வரை பலருக்கு ஃபேவரைட்டாக அமைந்து வருகிறது.இவர் சமீபத்தில்'லவ் டுடே' திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்தார். இவர் சமகால இயக்குனர்களான ஹெச்.வினோத்,பி.எஸ் மித்ரன் ஆகியோருடன் பணியாற்றிவிட்டார்.
இந்த லிஸ்டில் மீதம் இருப்பது பா.இரஞ்சித் தான்.பா.இரஞ்சித்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான்.சில கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் இருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் இசையமைப்பாளார் டென்மாவுடன் அவர் இணைந்திருந்தார். தற்போது இவர் இயக்கத்தில் விக்ரம்,பார்வதி திருவோத் ஆகியோர் நடிப்பில்'தங்கலான்' திரைப்படம் உருவாகி வருகிறது.இத்திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.