தெலுங்கு பட தயாரிப்பாளர், தில் ராஜூ விஜய்தான் நம்பர் ஒன் ஸ்டார் என்று சொல்லியிருந்தார். தற்போது ஏன் விஜய் நம்பர் ஒன் ஸ்டார் என விளக்கமளித்துள்ளார்.

Continues below advertisement

பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸாகும் வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு பெரிய ஹீரோக்களின் படம் நீண்ட ஆண்டுகள் கழித்து நேரடியாக மோதவுள்ளது. இந்த இரு படங்களின் குழுவினரும் அவர்களுக்கான ப்ரோமோஷன் வேலைகளை மும்மரமாக செய்து வருகின்றனர்.

முன்னதாக, வாரிசு படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜூ, பேட்டி ஒன்றில் “விஜய்தான் நம்பர் 1 ஸ்டார்” என்று பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார். அந்த சர்சையை தீர்க்கும் விதமாக, “நான் சொன்னதை  தவறுதலாக புரிந்து கொண்டீர்கள்” எனவும் விளக்கமளித்தார். 

Continues below advertisement

அதன் பின், வாரிசு இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தில் ராஜூ நக்கலாக, “நம்பர் ஒன், நம்பர் ஒன்” என மேடையில் பேசினார். இது மீண்டும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதற்கான  தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார் தில் ராஜூ.

சமீபமாக நடந்த நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர், “விஜய் மற்றும் அஜித் படங்களுக்கு சமமான தியேட்டர்கள் ஒதுக்கப்படுகின்றன. அப்படி இருப்பினும், என் ஹீரோ விஜய்தான் பெரிய ஸ்டார். அதனால்தான் வாரிசுக்கு நிறைய திரையரங்குகளை ஒதுக்குங்கள் என்று கேட்டேன். ஒருவர் பெரிய ஸ்டார் என்பதை எப்படி நிர்ணயம் செய்யமுடியும் ..? ஒரு திரையுலக நட்சத்திரத்தின் மதிப்பு, அவருக்கு திரையரங்குகளில் கிடைக்கும் வசூல் மூலமே நிர்ணயம் செய்யப்படும். 

விஜய் நடித்து வெளியான கடைசி 6 படங்களும், தமிழகத்தில் மட்டும் 60 கோடி ரூபாயிற்கு மேல் வசூல் செய்துள்ளது; ஒரு படம் ஹிட்டோ ஃப்ளாப்போ.. அது வேறு விஷயம். விஜயின் படங்கள் தொடர்ந்து சீரான வசூலை செய்து வருகிறது. அதனால், தற்போது மற்றவர்களை விட அவர்தான் பெரிய ஸ்டார்.” என தனது விளக்கத்தை தில் ராஜூ கொடுத்துள்ளார்.

தற்போது, வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ள சோல் ஆஃப் வாரிசு என்ற பாடல் அமெரிக்க இசை மற்றும் பொழுதுபோக்கு இதழான பில்போர்ட் வெளியிட்ட பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது.