விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் பொங்கலுக்கு ரிலீஸாக தயாராக இருக்கும் திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தின் மூலம் முதல் முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.
ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பாலிவுட்டில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'மிஷன் மஜ்னு'. சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக லீட் ரோலில் நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ராஷ்மிகா பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
2016ம் ஆண்டு கிரிக் பார்ட்டி திரைப்படம் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனை தெடர்ந்து தெலுங்கு, தமிழ் படங்களில் அடுத்தது சூப்பர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உருவெடுத்த அவர், ஏராளமான ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டார்;
மேலும் அமிதாப்பச்சன் மகளாக குட்பை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த அவர் தற்போது மிஷன் மஜ்னு படத்தில் நடித்து இருக்கிறார்; இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராஷ்மிகா, “ தென்னிந்திய திரைப்படங்களில் கவர்ச்சி பாடல்கள், மசாலா பாடல்கள் என பெப்பியான பாடல்கள்தான் வருகின்றன.
பாலிவுட்டில் தான் மெலடி ரொமான்டிக் சாங்ஸ் அதிகமாக வருகின்றன. நான் மிகவும் ஆவலாக எதிர்பார்த்த ரொமான்டிக் பாடல் மிஷன் மஜ்னு படத்தில் உள்ளது. அதை கேட்பதற்காக நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். நீங்கள் கேட்ட பிறகு உங்களுக்கு பிடிக்கும்” என்றார் ராஷ்மிகா இவரது இந்த பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ராஷ்மிகாவின் இந்த கருத்தை பலர் ஆமோதித்தாலும், பலர் மிகுந்த ஆத்திரத்தில் கொந்தளித்து வருகின்றனர். பாலிவுட்டில் இனிமையான மெலடி பாடல்கள் இருக்கிறது என்பது உண்மை தான் ஆனால் அதற்காக தென்னிந்திய திரைப்படங்களில் கவர்ச்சியான பாடல்களும், மசாலா பாடல்களும் மட்டுமே இருக்கின்றன என சொல்வது சரியல்ல என பலரும் கருத்து தெரிவித்து கண்டனம் செலுத்தி வருகிறார்கள்.
ஒட்டுமொத்தமாக தென்னிந்திய பாடல்களை மட்டம் தட்டி விட்டு ஹிந்தி பாடல்களை கொண்டாடுவதை கடுமையாக கண்டித்து வருகிறார்கள்; கொஞ்சம் கூட யோசனை இல்லாமல் இடத்திற்கு ஏற்றாற்போல் பேசுகிறார் என்றும் ராஷ்மிகாவின் ஆரம்ப காலகட்டத்தில் தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் ஏரளமான சூப்பர் ஹிட் ரொமான்ஸ் மெலடி பாடல்கள் இடம்பெற்றதை எல்லாம் மறந்து விட்டு இப்படி பேசியது தவறு என்றும் கண்டித்து வருகிறார்கள். மேலும் இதனால் தான் கன்னட மக்கள் இவரை வெறுக்கிறார்கள் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.