தி கோட்


வெங்கட் பிரபு இயக்கியுள்ள தி கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வெளிநாடுகளில் படத்திற்கான முன்பதிவில் படுவேகமாக நடைபெற்று வருகின்றன. தி கோட் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் நடிகர் விஜய் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதனைத் தொடர்ந்து படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமடையவிருக்கின்றன. தற்போது தி கோட் படத்திற்காக மலேசியாவில் ப்ரோமோஷன் செய்து வருகிறார் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, இந்த நிகழ்ச்சியில் தி கோட் படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் மீதான விமர்சனம் குறித்து வெங்கட் பிரபு பதிலளித்தார்.


அனிருத் செய்ததை யுவன் செய்ய மாட்டார்


“ தி கோட் படத்தில் நான் விஜயுடன் முதல் முறையாக இணைந்து வேலை செய்கிறேன். அதே போல் யுவனும் முதல் முறையாக விஜய் படத்திற்கு இசையமைக்கிறார். அதனால் அவருக்கு ரொம்ப அதிகமாகவே பிரஷர் இருக்கிறது. அவன் வேலை செய்யும்போதே அந்த பிரஷர் இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. அதுவும் இல்லாமல் சமீப காலங்களில் விஜய் படத்திற்கு அனிருத் மிகச் சிறப்பான பாடல்களை வழங்கிவருகிறார். நிச்சயமாக அனிருத் செய்ததை யுவன் செய்ய மாட்டார். அவர் தன்னுடைய மேஜிக்கைதான் உருவாக்க நினைப்பார். நிச்சயமாக படத்துடன் சேர்ந்து பார்க்கும்போது உங்களுக்கு யுவனின் இசை பிடிக்கும். ஆனால் அவருக்கு அதிகப்படியான பிரஷர் இருப்பது உண்மை. “ என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். 






தி கோட் திரைப்படத்தில் இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. முதலில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரசிகர்கள் போகப்போக பாடல்களை பாராட்டி வருகிறார்கள். தி கோட் படத்தின் அடுத்து ஸ்பெஷலான ஒரு பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் பாடலில் த்ரிஷா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.