Pushpa 2 : புதிய போஸ்டரை வெளியிட்ட புஷ்பா 2 படக்குழு... டிசம்பர் ரிலீஸ் உறுதி

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் புஷ்பா 2 படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது

Continues below advertisement

புஷ்பா 

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் , உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ், இந்தி , கன்னடம் என அனைத்து மொழிகளில் பான் இந்திய வெற்றிபெற்றது இப்படம். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Continues below advertisement

புஷ்பா 2

கிட்டதட்ட 500 கோடி ருபாய் செலவில் புஷ்பா 2 உருவாகி வருகிறது. முந்தைய பாகத்தில் இரண்டாம் பாதியில் மட்டும் வில்லனாக நடித்த ஃபகத் ஃபாசில் இப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்துள்ளார். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இதனைத் தொடந்து கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. 

படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குநர் சுகுமார் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனால் படத்தின் மீதமிருக்கும் காட்சிகள் தற்காலிமாக நிறுத்திவைக்கப் பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. மேலும் நடிகர் அல்லு அர்ஜூன் புஷ்பா 2 லுக்கிற்காக வைத்திருந்த தாடியை நீக்கியது இந்த வதந்திகளை உறுதிபடுத்தியது. இதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் மற்றும் சுகுமார் இடையில் எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை என படக்குழிவினர் விளக்கமளித்தார்கள்

புஷ்பா 2 டிசம்பர் ரிலீஸ்

வரும் டிசம்பர் 6 ஆம் தேதி புஷ்பா படம் திரயரங்கில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ள நிலையில் தற்போது புஷ்பா படத்தில் சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola