இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் தான் இருக்கும் வீடியோ ஒன்றை பிரபல பாடகர் யோ யோ ஹனி சிங் வெளியிட்டுள்ளார். 


கொரோனா தொற்றிற்கு மெல்ல மெல்ல மீண்டும் இயல்பு நிலை இந்தியாவில் திரும்பி வருகிறது. இதனால் 2 ஆண்டுகளாக நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்ட விழாக்கள் வழக்கத்தை விட மிக சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அபுதாபியில்  22வது IIFA (சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள்) விழா கோலாகலமாக நடந்து வருகிறது. 






இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் துபாய் சென்றுள்ளனர். 2 நாட்கள் நடைபெறும் இதில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டுள்ளார். அவருக்கு தனுஷ், அக்‌ஷய் குமார், சாரா அலிகான் நடிப்பில் வெளியான அட்ராங்கி ரே படத்தின் சிறந்த பின்னணி இசைக்கான விருது வழங்கப்பட்டது.


விருதினை பெற்று பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் 2 ஆண்டுகளில் பெரும் துயரங்களை கடந்து வந்துள்ளோம். இன்னும் சில ஆண்டுகள் இயல்பு நிலை திரும்ப ஆகலாம் என நினைத்திருந்தேன். இந்த விழா நிகழ்ச்சிகளை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என கூறினார். மேலும் இசை கலைஞர்களை இழப்பது மிக மிக கொடுமையானது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம்,லதா மங்கேஷ்கர், கேகே போன்ற கலைஞர்களை இழந்தது தனக்கு வருத்தமளிப்பதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்.




இந்நிகழ்ச்சியின் புகைப்படங்கள்,வீடியோக்கள் இணைந்து வைரலாகியுள்ள நிலையில் பிரபல பாடகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோ யோ ஹனி சிங் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. 






அதில் IIFA விழாவில் யோ யோ ஹனி சிங் பாடல் பாடிக்கொண்டே முன்வரிசையில் அமர்ந்திருந்த ஏ.ஆர்.ரஹ்மான் காலில் விழுகிறார். அவர் தனது பதிவில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஒரு இனிமையான தருணம் என தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண