பொதுத்தேர்வை எழுத வராத மாணவர்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட விவகாரங்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.


சென்னையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வில் சிலம்ப விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசியதாவது:


''இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் 12ஆம் வகுப்பு வரை படித்த தன்னார்வலர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கலாம் என்று வரையறுக்கப்பட்டு இருந்தது. மலைப் பிரதேசங்களில் பன்னிரண்டாம் வகுப்பு என்ற கல்வித் தகுதியைப் பத்தாம் வகுப்பு என்று தளர்த்த முடிவெடுத்துள்ளோம் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கும் இடங்களில் எல்லாம் உடனடியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். 


ஆசிரியர் பற்றாக்குறை தீரும்..


பல்வேறு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாய்ச் சொல்கிறீர்கள். கடந்த ஓராண்டு காலத்தில் 9 ஆயிரத்து 494 ஆசிரியர்கள் கூடுதலாகத் தேவைப்படுகின்றனர் என்று கண்டறியப்பட்டு உள்ளது. அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். அதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை முடிவுக்கு வந்தபிறகு ஆசிரியர் பற்றாக்குறை தீரும்.


பொதுத்தேர்வுகளை எழுத வராத மாணவர்களை அப்படியே விட்டு விடக்கூடாது என்பதி உறுதியாக உள்ளோம். இதற்காக அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தனி நிகழ்ச்சியை நடத்த முடிவெடுத்துள்ளோம். தேர்வுகளை எழுத மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைத்து உடனடியாக ஜூன் மாதத்தில், ஜூலை மாதத்தில் அல்லது செப்டம்பர் மாதத்தில் தேர்வை எழுத வைக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளோம்.




'உடனடியாகப் பள்ளிக்கு வந்து தேர்வை எழுதுங்கள்'


எனினும் மாணவர்கள் ஏன் வரவில்லை என்ற காரணத்தைக் கண்டறிய வேண்டியது எங்களின் கடமை. அந்தப் பணியில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பொதுத் தேர்வுகளை எழுத வராத மாணவர்கள், உடனடியாகப் பள்ளிக்கு வந்து தேர்வை எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பள்ளி மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பது குறித்த எந்த அறிவிப்பும் சுகாதார துறையிடம் இருந்து இதுவரை வரவில்லை. முதலமைச்சர் அலுவலகம் அளிக்கும் அறிவுறுத்தலை நாங்கள் பின்பற்றுவோம்’’.


இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண