வி.ஜே சித்து
தமிழ் யூடியூபர்களில் அதிகப்படியான ரசிகர்களை கொண்டவர்களில் ஒருவர் விஜே சித்து. நிகழ்ச்சித் தொகுப்பாளர் , பிராங் ஷோ என கரியரைத் தொடங்கிய விஜே சித்து தற்போது சித்து வ்ளாக்ஸ் என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். பல்வேறு இடங்களுக்குச் சென்று தனது குழுவுடன் சித்து வெளியிடும் வீடியோவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள். இதுதவிர்த்து சித்துவின் மொட்டை மாடி வித் சித்து நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளார்கள். வி.ஜே சித்து சமீபத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் நிறைய எதிர்ப்புகளை பெற்று வருகிறது
காமெடி என்கிற பேரில் எல்லை மீறிய சித்து
வி.ஜே சித்துவின் நிறைய வீடியோக்களில் காமெடி செய்கிறேன் என்று தன் பக்கத்தில் இருப்பவர்களை அடிக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான வீடியோவில் அவர் ஒருவரை அடித்து மிதித்து காமெடி செய்தது பலரை கடுப்பாக்கியுள்ளது. காமெடி என்கிற பெயரில் சித்து எல்லை மீறிப் போவதாக பலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். Worstடா டேய். காமெடின்ற பேர்ல எல்லை மீறி போயிட்டு இருக்கான் vj siddhu🤦♀️ pic.twitter.com/IpeIJbRiZT