தனுஷ் நடிப்பில் வருகிற ஜூன் 18-ஆம் தேதி வெளியாகும் இருக்கும் திரைப்படம் ஜகமே தந்திரம் . நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது இந்த திரைப்படத்திற்கு தனுஷ் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்த படம் வெளியாவதற்கு முன்னதாகவே படம் குறித்த சில அப்டேட்ஸை படக்குழு வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் IKORODU BOIS என்ற இணையதள இளைஞர்கள் ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலரை தத்ரூபமாக ரீமேக் செய்துள்ளனர். “லோ பட்ஜெட் வெர்சன் ஆஃப் ஜகமே தந்திரம் என இதற்கு பெயரிட்டுள்ளனர். இது நெட்டிசன்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுவருகிறது. அதீத பட்ஜெட் செலவில் உருவாக்கப்பட்ட படத்தின் ட்ரைலரை, நேர்த்தியாக கையில் மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு வடிவமைத்துள்ளனர். படத்தில் தனுஷ் பேசும் தமிழ் வசனங்களை கூட கற்றுக்கொண்டு அவரை போலவே அசலாக நடித்திருக்கிறார் இளைஞர் ஒருவர். இது இன்ஸ்டாகிராமில் தற்போது 301822 பார்வையாளர்களை கடந்துள்ளது.
Jagame Thandhiram | லோ பட்ஜெட் ஜகமே தந்திரம் ! நைஜீரியன்ஸின் புதிய முயற்சி !
அபிநயா
Updated at:
09 Jun 2021 08:25 PM (IST)
அதீத பட்ஜெட் செலவில் உருவாக்கப்பட்ட படத்தின் ட்ரைலரை, நேர்த்தியாக கையில் மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்களைக்கொண்டு வடிவமைத்துள்ளனர். படத்தில் தனுஷ் பேசும் தமிழ் வசனங்களை கூட கற்றுக்கொண்டு அவரைப்போலவே அசலாக நடித்திருக்கிறார் இளைஞர் ஒருவர். இது இன்ஸ்டாகிராமில், தற்போது 301822 பார்வையாளர்களை கடந்துள்ளது.
ஜகமே தந்திரம்
NEXT
PREV
இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்தில் உள்ள இரண்டு பாடல்களும், ஓடிடி தளத்தில் இடம்பெறாது என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இதற்கு விளக்கம் அளித்துள்ள அவர், ஓடிடி தளத்தில் படம் இடைவேளை இல்லாமல் செல்லும் ,உலகின் பல இடங்களில் இது காட்சிப்படுத்தப்படுவதால் அதை நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பாடல்களானது தியேட்டர்களுக்காக உருவாக்கப்பட்டது, மீண்டும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்பொழுது பாடல்கள் சேர்க்கப்படும்” எனவும் விளக்கமளித்துள்ளார்.
Published at:
09 Jun 2021 08:25 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -