தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி நகைச்சுவை நடிகராக உலா வருபவர் யோகிபாபு. இவர் யூ டியூப் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரபல யூ டியூப் தொலைக்காட்சியினர் தன்னிடம் பணம் கேட்டதாக கருத்து தெரிவித்தார். அந்த யூ டியூப் தொலைக்காட்சி வலைப்பேச்சி என்று தகவல் பரவியது.
அஜித் தொடக்கூடாது என்று சொன்னாரா?
இதையடுத்து, வலைபேச்சு யூடியூபர்கள் நேற்று வெளியிட்ட வீடியோவில் யோகிபாபுவை சரமாரியாக விமர்சித்ததுடன், தகாத வார்த்தைகளாலும் பேசியிருந்தார். மேலும், அஜித் யோகிபாபுவை நடத்திய விதத்தை கூறி யோகிபாபுவே மனம் வருந்தினார் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த தகவல் இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக வேதாளம் படப்பிடிப்பின்போது அஜித் யோகிபாபு மற்றும் மொட்டை ராஜேந்திரன் இருவரையும் போட்டோ எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட யோகிபாபு என்னுடைய விருப்பமான போட்டோ என்று பதிவிட்டுள்ளார். மேலும், மை டியர் தல என்ற ஹேஷ்டேக்கையும், அஜித்குமார் சார் என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார். இது வலைபேச்சு யூ டியூப் தொலைக்காட்சிக்கு யோகிபாபு அளிக்கும் பதிலாக அமைந்துள்ளது.
ரசிகர்கள் ஆவேசம்:
அஜித் ரசிகர்களும் கடந்த காலத்தில் அஜித் தங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், ரசிகர்கள் அஜித்திற்கு முத்தம் கொடுக்கும் புகைப்படங்கள், அஜித் ரசிகர்கள் தோள் மீது கை போட்டு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். பிரபல நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ள யோகிபாபு அஜித்துடன் வேதாளம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
வலைப்பேச்சு யூடியூப் தொலைக்காட்சியினர் யோகிபாபுவை சரமாரியாக விமர்சித்ததுடன் யோகிபாபுவிடம் பணம் கேட்டதற்கான ஆதாரத்தை வௌியிட வேண்டும் என்றும், கோயிலுக்கு வந்து தெய்வத்தின் முன் சத்தியம் செய்யுமாறும் பேசினர். மேலும், தினசரி 25 லட்சம் ரூபாய் ஊதியம் பெறும் யோகிபாபு, அதில் ரூபாய் 20 லட்சத்தை கருப்பு பணமாகவே பெறுகிறார் என்றும் கூறுகிறார்கள். அவர்களது கருத்துக்கள் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.