ஷாருக்கான் - அட்லி கூட்டணியில்  ஜவான் படத்தின் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் மூலம் லேடி சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் நயன்தாரா பாலிவுட் எண்ட்ரி கொடுக்கிறார்.


அவருடன் நடிகர் யோகிபாபுவும் பாலிவுட் எண்ட்ரி கொடுக்க உள்ளது தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், முன்னதாக பான் இந்தியா நடிகராக யோகிபாபு உயர்ந்துள்ளது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஜாலியாக பதிலளித்தார். ஹைதராபாத்துக்கு போய்ட்டு வந்ததால் இப்படி சொல்வதா? வாரிசு ஷூட்டிங்குக்காக தான் ஹைதராபாத் போய் வந்தேன். நான் பாலிவுட் படத்துக்காக எங்கயும் செல்லவில்லை. ஷாருக்கான் தான் இங்கு வந்து நடிக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.






யோகி பாபு ஏற்கெனவே ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்துள்ள நிலையில், தற்போது மீண்டும் அவருடன் இந்தப் படத்தில் நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவின் முக்கிய காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு, மண்டேலா படத்துக்குப் பிறகு நல்ல கதையம்சம் கொண்ட குணச்சித்திரப் படங்களையும் யோகிபாபு தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.






இவரது நடிப்பில் ஷான் இயக்கி, பா.ரஞ்சித் தயாரித்திருக்கும் ’பொம்மை நாயகி’ படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.






மேலும் பிரபல மலையாள இயக்குநர் ரஞ்சித் மிதிலா இயக்கும் யானைமுகத்தான் எனும் படத்தில் நடிகர் ரமேஷ் திலக்குடன் முக்கிய வேடத்தில் யோகிபாபு நடிக்கிறார்.