Yezhezhu Malai lyrics :  தமிழ் சினிமாவின் தனித்துவமான கதைசொல்லி என அழைக்கப்படும் இயக்குநர் ராம் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. இப்படத்தில் நிவின் பாலி, அஞ்சலி லீட் ரோலில் நடித்துள்ளனர். வி ஹவுஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் கீழ் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 




மதன் கார்க்கியின் பாடல் வரிகளில், நடிகர் சித்தார்த் குரலில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'மறுபடி நீ' பாடல் ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று இருந்தது. 


அதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சிங்கிள் பாடலான 'ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி...' பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மதன் கார்க்கியின் பாடல் வரிகளுக்கு சந்தோஷ் நாராயணன் குரல் கொடுத்த இந்த மெலடி பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே ஏராளமான வியூஸ் பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


காதலியைத் தேடும் காதலனின் உணர்வுகளையும் எண்ண ஓட்டங்களையும் ஏக்கத்துடன் மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கும் இந்தப் பாடல், ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. இந்த லிரிக்கல் வீடியோவின் வித்தியாசமான காட்சி அமைப்பு வரவேற்பை பெற்றுள்ளது.


ஏழேலே மலை ஏழு கடல் தாண்டி  பாடல் வரிகள் :


ஏழேலே மலை ஏழு கடல் தாண்டி... எங்கெங்கோ அலைகிறேன் உன்னை தேடி !  


காடோடு பாலை வயல்  வெளித் தாண்டி ... நாடோடி அலைகிறேன் உன்னை தேடி!


சரணம் 1 :


எங்கேயும் எங்கேயும் உன் தடம் இல்லை...  நீ இல்லா மண் மீதும் என்னிடம் இல்லை


சில ஆயிரம் ஆண்டாய் காத்திருந்தேன்...  நூறாயிரம் ஆசைகள்  சேர்த்திருந்தேன்!


ஏழேழு மழை ஏழு கடல் தாண்டி... எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி!


காடோடு பாலை வயல் வெளி தாண்டி...  நாடோடி அலைகிறேன் உன்னை தேடி!


சரணம் 2 :


இலையோடும்  மலரோடும்  உன் விரல் ரேகை...  வழியெல்லாம் வலியெல்லாம் உன் குழல் வாசம் ... 


நீரோடை முழுதும் உன்  வேர்வை கயல்கள்...  முட்புதரில் இடையில் உன் பார்வை முயல்கள் 


இத்தேடல் முடிந்தால் நீ அங்கே இருந்தால்... என் நெஞ்சம் உடைந்தாலும்  உடையும் !


கவிதைகள் அனைத்தும் தொலைந்த ஒரு மொழியாய்...


உனை உனை இழந்தேன் வாடுகிறேன்...


தனை கண்ட விழியை தொலைத்த ஓர் கணவாய்...


திசை கேட்டு தறிக்கெட்டு ஓடுகிறேன்!


 



ஏழேழு மாலை ஏழு கடல் தாண்டி... எங்கெங்கோ அலைகிறேன்  உயிர் தேடி !


காடோடு பாலை வாயில் வெளி தாண்டி...  நாடோடி அலைகிறேன் உன்னை தேடி  உன்னை தேடி!


எப்போ ரிலீஸ்?


நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. சமீபத்தில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா மற்றும் ரஷ்யாவின் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்றது.


இயக்குநர் ராம் படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் இந்த படம் பல ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து தற்போது வெளியாக உள்ளதால் ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது. வழக்கமான நிவின் பாலியின் படமாக இல்லாமல் இந்த படத்தில் அவரின் தோற்றம் நடிப்பு என அனைத்துமே வித்தியாசமாக இருப்பது அவரின் திரை பயணத்தில் மிக முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை அஞ்சலிக்கும் இது முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.