Anant Ambani Sangeet: அனந்த் - ராதிகா திருமண : தாத்தா - பேரன், பேத்திகள்.. நடனமாடி அசத்திய அம்பானி குடும்பம்

Anant Ambani Sangeet: ஆனந்த் அம்பானி - ராதிக மெர்ச்சண்ட் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

Continues below advertisement

Anant Ambani Sangeet: ஆனந்த் அம்பானி - ராதிக மெர்ச்சண்ட் திருமணத்தை முன்னிட்ட நிகழ்ச்சியில், அம்பானி குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் மேடையில் நடனமாடி அசத்தியுள்ளனர்.

Continues below advertisement

ஆனந்த் அம்பானி - ராதிகா திருமண கொண்டாட்டம்:

இந்தியாவின் பெரும் பணக்காரரான அம்பானியின் மகன் ஆனந்திற்கும், மற்றொரு பெரும் தொழிலதிபரான ராதிகா மெர்ச்சாண்டிற்கும் திருமணம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பல்வேறு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று மும்பையில் நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில், எராளமான திரை மற்றும் விளையாட்டு உலக பிரபலங்கள் பங்கேற்றனர். மேலும், ஜஸ்ட்ன் பீபர் போன்ற உலக புகழ்பெற்ற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.

நடனமாடி அசத்திய அம்பானி குடும்பம்:

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அம்பானி குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் சேர்ந்து, மேடையில் நடனமாடியது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஓம் சந்தி ஓம் படத்தில் இடம்பெற்ற ”தீவாங்கி தீவாங்கி” பாடலுக்கு அவர்கள் நடனமாடியுள்ளனர். அந்த வீடியோவில், “ஆகாஷ் அம்பானி முதலில் மேடைய்ல் நடனமாட, இஷா அம்பானி மேடைக்கு வருகிறார். அவரை தொடர்ந்து ஆகாஷ் அம்பானியின் மனைவி ஸ்லோகா மேதா, நீதா அம்பானி, முகேஷ் அம்பானி ஆகியோர் அடுத்தடுத்து மேடைக்கு வந்தனர். இறுதியாக ஆனந்த் மற்றும் ராதிகா ஆகியோர் ஜோடியாக வர, மொத்த குடும்பத்தினரும் சேர்ந்து நடனமாடி அசத்தினர். குறிப்பாக நீதா அம்பானி தனது பரதநாட்டிய திறமையை வெளிப்படுத்தி அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பேரக் குழந்தைகளுடன் பயணம்:

இதனிடையே, முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவில் நீதா அம்பானி ஆகியோர், பழைய கால சிறிய கார் ஒன்றில், தங்களது பேரக்குழந்தைகளான பிரித்வி, ஆதியா கிரிஷ்ணா மற்றும் வேதா ஆகியோருடன் பயணிப்பது போன்ற ஒரு வீடியோவும் சங்கீத் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா திருமணம் வரும் 12ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நாட்டின் பல முக்கிய பிரமுகர்கள் இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola