ஹீரோக்களுக்கு நிகரான வரவேற்பு, வில்லன் நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் கிடைப்பதால், ஹீரோவாக நடிக்கும் நடிகர்கள் கூட, அதிரடியாக வில்லன் அவதாரம் எடுக்கிறார்கள். ஆனால் இதற்காக இவர்கள் வாங்கும் தொகை தான் கொஞ்சம் பெருசு. ஆனால் பல கோடி காசு போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் வில்லனாக நடிக்க நடிகர்கள் கேட்டும் சம்பளத்தை எந்த ஒரு சுணக்கமும் இன்றி வாரி கொடுக்கின்றனர். அப்படி இந்த ஆண்டு வில்லனாக நடிக்க, பல கோடி சம்பளம் வாங்கிய 5 நடிகர்கள் பற்றிய தகவல் இதோ..
கல்கி 2898 AD - கமல்ஹாசன்:
60 வருடங்களுக்கு மேலாக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் மக்கள் கலைஞரான உலக நாயகன் கமல்ஹாசன் இந்த ஆண்டு, வில்லனாக நடித்து வெளியான திரைப்படம் 'கல்கி 2898 AD . இயக்குனர் நாக் அஷ்வின் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், கமல்ஹாசனின் காட்சிகள் 10 நிமிடம் மட்டுமே காட்டப்பட்டது. இந்த 10 நிமிட காட்சியில் நடிக்க ரூ.20 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார்.
தேவாரா - சைப் அலிகான்:
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கொரட்டல சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'தேவாரா'. பான் இந்தியா திரைப்படமாக வெளியான இந்த படத்தில், பாலிவுட் நடிகர் சைப் அலிகான் வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க, இவருக்கு ரூ.12 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
சைத்தான் - மாதவன்:
தமிழ் படங்களில் ஒரு காலத்தில் சாக்லேட் பாய்யாக வலம் வந்த மாதவன், சில வருடங்களாக வித்தியாசமான கதைத்தேர்வை அதிகம் விரும்புகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான 'சைத்தான்' திரைப்படத்தில் வில்லன் ரோலில் நடிக்க, ரூபாய்.10 கோடி முதல் 12 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.
புஷ்பா 2 - பகத் பாசில்:
அதிவேகமாக ரூ.1000 கோடி வசூலால் ரசிகர்களை பிரமிக்க வைத்து வரும், புஷ்பா 2 படத்தில் வில்லனாக நடிக்க, மலையான நடிகரான பகத் ஃபாசில் மிகப்பெரிய தொகையை தான் சம்பளமாக பெற்றுள்ளார். முதல் பாகத்தில் நடிக்க 3 கோடி வாங்கிய இவர், இரண்டாம் பாகத்தில் நடிக்க 8 கோடி பெற்றதாக கூறப்படுகிறது.
கங்குவா - பாபி தியோல்:
நடிகர் சூர்யா நடிப்பில் எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்கள் மனதை படு வேதனை படுத்திய படம் தான் 'கங்குவா'. சிறு சிறு மாற்றங்கள் செய்திருந்தால் இப்படம் வேற லெவல் ஹிட்டடித்திற்கும் என்பதே உண்மையான சூர்யா ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்த பாலிவுட் நடிகர் பாபி தியோல் ரூபாய் 5 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.