இந்திய அணியின் அனுபவமிக்க பேட்ஸ்மேனான அஜிங்க்யா ரஹானே சையத் முஷ்டாக் அலி டிராபியின் அரையிறுதியில் விதர்பாவுக்கு எதிராக அஜிங்க்யா ரஹானே வெறும் 27 பந்துகளில் அரைசதம் அடித்து மும்பை அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றார்.
அஜிங்கியா ரகானே:
இந்திய அணியில் இருந்து வெளியேறியுள்ள அஜிங்க்யா ரஹானே, தனது அதிரடியான பேட்டிங்கால் உள்நாட்டு கிரிக்கெட்டில் அசத்தி வருகிறார். அஜிங்க்யா ரஹானே தற்போது சையத் முஷ்டாக் அலி கோப்பையில் மும்பை அணிக்காக விளையாடி வரும் அவர் அரையிறுதி ஆட்டத்தில் தனது அதிரடியான பேட்டிங்கால் அசத்தினார். ஆலூரில் விதர்பாவுக்கு எதிரான இந்தப் போட்டியில், ரஹானே 27 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். ரஹானே தனது அரை சதத்தோடு வரை மட்டும் நிற்காமல், அவர் 84 ரன்கள் எடுத்து விதர்பா பந்துவீச்சாளர்களை சிதறவிட்டார்.
இதையும் படிங்க: Look Back 2024 : 2024-ன் சைலண்ட் சம்பவக்காரர்கள்.. நிதிஷ் முதல் பெத்தேல் வரை... கவனம் ஈர்த்த வீரர்களின் முழுவிவரம் இதோ!
இந்த சிறப்பான இன்னிங்ஸில், ரஹானே மொத்தம் 45 பந்துகளை எதிர்கொண்டார், அதில் அவர் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களையும் அடித்தார். ரஹானேவின் இந்த அற்புதமான பேட்டிங்கால் விதர்பா அணி எளிதாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ரஹானேவுக்கு முன், ப்ரித்வி ஷாவும் மும்பை அணிக்காக அதிவேகமாக விளையாடி 26 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார்.
இறுதிப்போட்டியில் மும்பை:
சையத் முஷ்டாக் அலி கோப்பையின் அரையிறுதியில் மும்பைக்கு எதிராக விதர்பா அணியும் வலுவாக பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி மும்பை அணிக்கு 222 ரன்கள் என்ற சவாலான ஸ்கோரை நிர்ணயித்தது. விதர்பா அணியில் அதர்வா தைடே மற்றும் அபூர்வா வான்கடே ஆகியோர் அரைசதம் விளாசினர்.
துபே அதிரடி:
இருப்பினும் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மும்பை அணியின் பேட்டிங் அசத்தியது. மும்பை அணிக்கு ப்ரித்வி ஷா நல்ல தொடக்கத்தை கொடுத்தார். அதன் ரகானேவும் ஆட மும்பை வெற்றியை நோக்கி பயணித்தது. இறுதிக்கட்டத்தில் ஷிவம் துபே 22 பந்துகளில் 37 ரன்களும், சூர்யன்ஷ் 12 பந்துகளில் 36 ரன்களும் எடுத்தனர், இறுதியில் மும்பை அணிக்கு 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மற்றொரு அரையிறுதியில் உத்தர பிரதேச அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.