2023 ஆம் ஆண்டு நாளையுடன் நிறைவடையும் நிலையில், இந்தாண்டு யாராலும் மறக்க முடியாத நிகழ்வுகள் பல நடந்துள்ளது. அந்த வகையில் நடப்பாண்டில் விபத்தில் சிக்கிய பிரபலங்கள் பற்றி காணலாம். 



  • ஜனவரி 2 - அவெஞ்சர்ஸ் படத்தில் நடித்த ஜெர்மி ரன்னர் கடும் பனிப்பொழிவு காரணமாக  விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார் - இதில் அவரின் உடலில் 30 எலும்புகள் நொறுங்கியது  

  • பிப்ரவரி 4 ஆம் தேதி - இம்பாலில் பங்கேற்க இருந்த பேஷன் ஷோ நிகழ்ச்சி நடந்த நிகழ்ச்சி நடந்த இடத்தின் அருகில் குண்டு வெடிப்பு - ஒருநாள் முன்னதாகவே சம்பவம் நடந்ததால் சன்னி லியோன் தப்பினார்

  • பிப்ரவரி 22 ஆம் தேதி - மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் கட்டுப்பாட்டை இழந்து மோதிய பேருந்து - நூழிலையில் நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா உயிர் தப்பினர் 

  • மார்ச் 6 ஆம் தேதி - பாடல் ஷூட்டுக்காக சென்ற இடத்தில் மேலே கட்டப்பட்ட அலங்கார விளக்குகள் அறுந்து விழுந்து விபத்து - நூழிலையில் உயிர் தப்பினார் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் 

  • மார்ச் 25 ஆம் தேதி - ஸ்காட்லாந்தில் ஷூட்டிங்கில் இருந்த நடிகர் அக்‌ஷய் குமாருக்கு முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது

  • மே 3 ஆம் தேதி - தங்கலான் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் விக்ரம் படுகாயம் அடைந்தார்

  • மே 7 ஆம் தேதி - ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெற்ற ‘காலத்துக்கும் நீ வேணும்’, பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற ‘சொல்’ ஆகிய பாடல்களைப் பாடி பிரபலமான பாடகி ரக்‌ஷிதா மலேசியாவில் விபத்தில் சிக்கினார்

  • மே 17 ஆம் தேதி - தி கேரளா ஸ்டோரி  படத்தில் நடித்த அடா ஷர்மா, அப்படத்தின் படத்தை இயக்கிய சுதிப்தோ சென்னுடன் காரில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் சென்றபோது விபத்து ஏற்பட்டு காயமடைந்தார்

  • மே 28 ஆம் தேதி - ‘எங்கேயும் எப்போதும்’ நடிகர் சர்வானந்த் கார் விபத்தில் சிக்கி காயங்களுடன் மீட்கப்பட்டார் - 6 நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இந்த சோக சம்பவம் நடைபெற்றது.

  • ஜூன் 13 ஆம் தேதி - பிரபல் ஹாலிவுட் நடிகர் ட்ரீட் வில்லியம்ஸ் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தார் - 71 வயதில் அவர் பைக் பயணம் மேற்கொண்டிருந்தார்

  • ஜூலை 30 ஆம் தேதி - கன்னட நடிகர் லோகேஷ் பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் கை,கால்கள் துண்டான நிலையில் உயிரிழந்தார்

  • ஆகஸ்ட் 17 ஆம் தேதி - முத்தழகு சீரியலில் நடித்து வரும் வைஷாலி கார் விபத்தில் சிக்கியதாக வீடியோ மூலம் தெரிவித்தார்

  • அக்டோபர் 4 ஆம் தேதி - இத்தாலியில் பயணம் மேற்கொண்டுள்ள பிரபல பாலிவுட் நடிகை காயத்ரி ஜோஷி தன் கணவருடன் கார் விபத்தில் சிக்கினார் - கார்கள் ஒன்றுக்கொன்று முந்த முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டது. 

  • நவம்பர் 22 ஆம் தேதி - கங்குவா படப்பிடிப்பில் இருந்த நடிகர் சூர்யா மீது ரோப் கேமரா அறுந்து விழுந்தது -இதில் அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது

  • டிசம்பர் 5 ஆம் தேதி - ரஜினி நடிக்கும் வேட்டையன் படப்பிடிப்பில் தனக்கு காயம் ஏற்பட்டதாக நடிகை ரித்திகா சிங் தெரிவித்தார்