இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி யுவன், அனிருத் என பல இசையமைப்பாளர்களும் இந்த ஆண்டு ’ரிப்பீட் மோடில்’ தரமான தமிழ் சினிமா பாடல்களைக் கொண்டாட வைத்துள்ளனர். மறுபுறம் இளம் இசையமைப்பாளர்கள் சிலரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி க்ளாசிக் பாடல்கள் அடங்கிய ஆல்பங்களை தந்து கவனம்  ஈர்த்துள்ளனர். 2022இல் அனைத்து தரப்பு ரசிகர்களின் ப்ளேலிஸ்டிலும் இடம்பிடித்த டாப் ஹிட் பாடல்கள் அடங்கிய தமிழ் சினிமா ஆல்பங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.


காத்து வாக்குல ரெண்டு காதல்




’டிப்ப டப்பம்’, ’டூ டுட்டு டூ’ என குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை ஆட வைத்த அனிருத், மற்றொரு புறம் ’நான் பிழை’ என மெலடியிலும் மூழ்கடித்தார். இந்த ஆண்டு எஃப் எம்களில் ஓடித்தீர்ந்து ஹிட் அடித்தன ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ பட பாடல்கள். 


பீஸ்ட்


விஜய்யின் கலக்கல் நடனத்தை ஈடு செய்யும் வகையில் அமைந்த ’பீஸ்ட்’ படத்தின் பாடல்கள் அதிரிபுதிரி ஹிட். 'அரபிக்குத்து' பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்ததோடு உலக அளவில் ட்ரெண்ட் ஆகி சாதனைகள் படைத்தது.




மற்றொரு புறம் விஜய் குரலில் ஸ்டைலிஷ் தத்துவார்த்த பாடலாக அனைவரையும் ஹம் பண்ண வைத்து ஹிட் அடித்தது ’ஜாலியோ ஜிம்கானா’ பாடல்.


கேஜிஎஃப் 2




’கேஜிஎஃப்’ மூலம் கவனமீர்த்த ரவி பர்சூர், மீண்டும் கேஜிஎஃப் 2வில் அழுத்தமாக தன் முத்திரையைப் பதித்தார். டூஃபான், மெஹபூபா பாடல்கள் மூலம் அதிரடியாய் மீண்டும் கோலிவுட் ரசிகர்களின் இதயங்களை வென்றார். 


விக்ரம்


2022 அனிருத்தின் ஆண்டு. கமலின் காந்தக் குரலில் சென்னை தமிழில் ’பத்தல பத்தல’ தொடங்கி ’போர் கொண்ட நெஞ்சம்’ வரை பாடல்கள் ஒருபுறம் ஹிட் அடித்ததென்றால், விஜய் சேதுபதி தீம் தொடங்கி, ரோலக்ஸ் பிஜிஎம் வரை இளைஞர்களின் ரிங் டோன், காலர் ட்யூன்களை அனிருத் ஆக்கிரமித்து வெற்றிக்கொடு நாட்டினார்.




 


ஆர்ஆர்ஆர்




’மரகதமணி’ என அறியப்படும் எம்.எம்.கீரவாணி ராஜமவுலியின் ஆஸ்தான இசையமைப்பாளர். அவரது இசையில் அனைவரையும் ஆட்டம்போட வைத்த ’நாட்டுக்கூத்து’ முதல் அனிருத் குரல் கொடுத்த ’நட்பு’ பாடல் வரை ஆர்.ஆர்.ஆர் பட பாடல்கள் ஹிட் அடித்து லைக்ஸ் அள்ளின.


வெந்து தணிந்தது காடு


’அடங்காத ராட்டினத்தில் ஏறிக்கிட்டு’ என ரஹ்மானின் உச்ச ஸ்தாயி குரல் கேட்போரின் மனதைத் தொட்டது. மறுபுறம் மதுஸ்ரீயின் குரலில் ’மல்லிப்பூ’ கொண்டாட்ட மனநிலையையும் பிரிவின் ஏக்கத்தையும் ஒருசேர உணர்த்தி ஹிட் லிஸ்டில் இடம்பிடித்தது.


சீதா ராமம்


காதலும் இனிய தமிழும் ததும்பி வழியும் திகட்டாத பாடல்களை வழங்கி இந்த ஆண்டு ஆச்சரியப்படுத்திய ஆல்பம் விஷால் சந்திரசேகர் இசையில் அமைந்த ’சீதா ராமம்’ பட பாடல்கள்




சீதா ராமம் படத்தின் அனைத்து பாடல்களும் தமிழ் சினிமாவின் க்ளாசிக் ஹிட் பாடல்களாக நிலைத்து நிற்கும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.


திருச்சிற்றம்பலம்




மெலடியில் அனிருத் இந்த ஆண்டு ஸ்கோர் செய்த ஆல்பம் திருச்சிற்றம்பலம். சந்தோஷ் நாராயணின் ஐக்கானிக் குரலில் ’தேன்மொழி’ தொடங்கி, தனுஷ் முத்திரையுடன் கூடிய ’மேகம் கருக்காதோ’ வரை மெல்லிசைக் கச்சேரி நடத்தி லைக்ஸ் அள்ளினார் அனிருத்!


பொன்னியின் செல்வன்


’பொன்னி நதி’ ,’சோழா சோழா’ தொடங்கி ’அலை கடல் ஆழம்’ வரை பொன்னியின் செல்வனில் ரஹ்மான் நடத்தியது இசை சாம்ராஜ்யம்.


 




’அகநக முகநக’ தொடங்கி நந்தினி பிஜிஎம் வரை பாடல்களை ஓவர் டேக் செய்து இதயங்களை அள்ளியது படத்தின் பின்னணி இசை. 


லவ் டுடே




இந்த ஆண்டு யுவன் ஸ்பெஷலாக 2கே கிட்ஸின் ப்ளே லிஸ்டை புரட்டிப்போட்டு முதலிடம் பிடித்தன ’லவ் டுடே’ பட பாடல்கள். ரீல்ஸ் தொடங்கி காதலர்களின் ரிங் டோன் வரை லவ் டுடே பட பாடல்கள் ஆக்கிரமித்து லைக்ஸ் அள்ளின.


டான்




இளசுகளின் மற்றொரு ஹிட் லிஸ்ட் பாடல்கள் அடங்கிய ஆல்பம் ’டான்’. இந்த ஆண்டு ஸ்பாட்டிஃபை செயலியில் அதிகம் கேட்டு ரசிக்கப்பட்ட பாடல்களின் பட்டியலில் ’ஜல புல ஜங்கு’ இடம்பிடித்து மாஸ் காட்டியுள்ளது.