Yatra Dhanush: முந்தி கொண்ட தனுஷ்... மூத்த மகன் யாத்ரா சினிமாவில் அறிமுகம்!

Yatra Dhanush : தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ஆகஸ்ட் 30ம் தேதி வெளியாக உள்ள நிலையில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Continues below advertisement

 

Continues below advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'ராயன்'. அவருடைய 50 வது படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. திரையரங்க ரிலீசுக்கு பிறகு ஓடிடியில் வெளியான நிலையில் அங்கும் சரியான வரவேற்பை பெற தவறியது. 

 

 

அதன் தொடர்ச்சியாக தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். அது தவிர இளையராஜா பயோபிக், ஆனந்த் எல். ராய் மற்றும் மாரி செல்வராஜ் இயக்கும் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர ஹாலிவுட் படம் ஒன்றும் தனுஷ் லைன் அப்பில் காத்திருக்கிறது. நடிப்பில் பிஸியாக இருக்கும் தனுஷ் அதே வேளையில் ஹாலிவுட் படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்பில் பிஸியாக இருந்த போதிலிம் தான் இயக்கி வரும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். 

 

அந்த வகையில் அனிகா சுரேந்தர், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'கோல்டன் ஸ்பேரோ' என தலைப்பிடப்பட்டுள்ள பாடல் ஆகஸ்ட் 30ம் தேதி வெளியாக உள்ளது. இதில் நடிகை பிரியங்கா மோகன் சிங்கிள் பாடலுக்கு கேமியோ ரோலில் நடனமாடியுள்ளார் என்ற தகவல் வெளியானது. 

 

 

அதை தொடர்ந்து மற்றுமொரு சர்ப்ரைஸ் தகவலாக இப்பாடலின் வரிகளை நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ரா எழுதியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஹூக் வரிகளை யாத்ரா எழுத மற்ற வரிகளை அறிவு எழுதியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தாத்தா ரஜினிகாந்த், அம்மா ஐஸ்வர்யா ராய் இருவரும் யாத்ராவை சினிமாவில் அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே முந்தி கொண்ட அவனை சினிமாவில்  பாடலாசிரியராக அறிமுகப்படுத்திவிட்டார் தனுஷ்.  மகன் யாத்ரா பாடலாசிரியராக தொடர்கிறாரா அல்லது நடிப்பில் இறங்க போகிறாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். இந்த அப்டேட் தனுஷ் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. 

Continues below advertisement