வுமன் சென்ட்ரிக் திரைப்படமாக வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூலை ரீதியாகவும் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'யசோதா'. நடிகை சமந்தா லீட் ரோலில் நடித்த இப்படம் சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி ஒரு பிளாக் பஸ்டர் திரைப்படமாக வெற்றி நடை போட்டு வந்த நிலையில் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
யசோதா படத்திற்கு வந்த சிக்கல் :
ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக சாதனை படைத்து வந்த 'யசோதா' திரைப்படம் மீது சிவில் நீதிமன்றம் மூலமாக தடையை எதிர்கொண்டுள்ளது. இதனால் இப்படத்தின் ஓடிடியில் ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நடிகை சமந்தா இப்படத்தில் ஒரு வாடகை தாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனால் வாடகை தாய் முறை குறித்த சில விவாதங்கள் இப்படத்தில் இடம் பெற்று இருந்தன. அதிலும் குறிப்பாக ஐதராபாத்தில் உள்ள EVA IVF மருத்துவமனையை மையாக வைத்து படமாக்கபட்டிருந்தது. தங்களின் மருத்துவமனையை தவறாக சித்தரித்துள்ளதாக யசோதா திரைப்படத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் குற்றச்சாட்டு :
EVA IVF மருத்துவமனை, வாடகைத் தாய் விவகாரத்தில் ஒரு மாஃபியாவை போல காட்டப்பட்டுள்ளதாகவும் இதனால் அவர்களின் மருத்துவமனையின் மேல் உள்ள நம்பகத்தன்மை மற்றும் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்க காரணமாக இருக்கிறது என கூறி மருத்துவ நிர்வாகம் 'யசோதா' திரைப்படம் மீது மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு பதிலளித்த ஹைதராபாத் நீதிமன்றம் 'யசோதா' படத்தின் ஓடிடி ரிலீஸை ஒத்திவைத்துள்ளது. இப்படம் டிசம்பர் 19 தேதி ஓடிடியில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் இப்போது இந்த தடையானது பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படத்தை ஓடிடியில் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் வழக்கு நடைபெற்று கொண்டு இருந்த சமயத்திலேயே டிஜிட்டல் ரிலீசும், பிரீமியர் காட்சியை நிறுத்துமாறும் கடிதங்கள் தயாரிப்பாளர் நிறுவனங்களுக்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சர்ச்சை குறித்து மற்ற விவரங்கள் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் விசாரணைக்கு பிறகு அறிவிக்கப்படும் என தெரிகிறது.
வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா மற்றும் பிரியங்கா சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த 'யசோதா' திரைப்படம் ஒரு பான் இந்திய திரைப்படமாக வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் முத்திரை பதித்துள்ளது.