Yashika Anand: 'சில இயக்குநர்கள் தப்பா நடந்துக்க ட்ரை பண்ணாங்க' - சினிமா உலகம் குறித்து வாய்திறந்த யாஷிகா!

நடிகை யாஷிகா ஆனந்த் பேட்டியொன்றில் ஆரம்பகால சினிமா வாழ்க்கை குறித்து பேசினார்

Continues below advertisement

இருட்டு அறையில் முரட்டு குத்து’ முதலான திரைப்படங்களில் நடித்தவரும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டவருமான நடிகை யாஷிகா ஆனந்தின் சமீபத்திய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

நடிகை யாஷிகா ஆனந்த் பேட்டியொன்றில் ஆரம்பகால சினிமா வாழ்க்கை குறித்து பேசினார். அதில், தனது தொடக்கக் கால சினிமா வாழ்க்கையில் சினிமாவுக்காக வாய்ப்பு தேடும்போது  பல மோசமான அனுபவங்களை சந்தித்தேன். பல இயக்குநர்கள் தன்னிடம் தவறான முறையில் நடந்துகொள்ள முயற்சி செய்தனர். இன்னும் சில இயக்குநர்கள் தவறான காட்சிகளை நடித்துக் காட்ட கேட்டார்கள். நான் அதையெல்லாம் ஒப்புக்கொள்ளாமல் அங்கிருந்து உடனடியாக கிளம்பிவிடுவேன் என்றார்.

யாஷிகா ஆனந்த் கடந்த ஜூலை 25 அன்று சென்னையில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்தார். அவருடன் பயணித்த அவரது தோழி இந்த விபத்தில் பலியானார். 

கடந்த ஜூலை 25 அன்று, புதுச்சேரியில் இருந்து சென்னைக்குத் தனது நண்பர்களுடன் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். மகாபலிபுரம் அருகில் வந்துகொண்டிருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து கிழக்குக் கடற்கரை சாலையில் நடுவில் இருந்த தடுப்பில் மோதி, குழிக்குள் விழுந்தது. நடிகை யாஷிகா ஆனந்த் கைகளிலும், கால்களிலும் எலும்பு முறிவு, ஆகியவற்றுடன் படுகாயம் அடைந்தார். எனினும், அவருடன் பயணித்த அவரது நெருங்கிய தோழி வள்ளி ஷெட்டி பவானி விபத்து நடந்த இடத்தில் உயிரிழந்தார்.

சாலை விபத்து நடந்து கடந்த பல வாரங்களாகச் சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார் நடிகை யாஷிகா. தன் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றங்களைத் தொடர்ந்து தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார் நடிகை யாஷிகா. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தன் அம்மா ஊட்டிவிட்டு உணவு உண்பதைப் பதிவு செய்திருந்தார் யாஷிகா. இந்தநிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்துக்குப் பிறகு பொதுவெளியில் இப்போதுதான் நடமாடத் தொடங்கியுள்ளார்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola