துபாயில் மனைவியுடன் டின்னர் டேட்டில் நேரம் செலவழித்த கேஜிஎஃப் நடிகர் யஷின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுவும் யாஷுக்கு ஹோட்டல் நிர்வாகம் கொடுத்த க்யூட் சர்ப்ரைஸ் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்துள்ளது.
கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கேஜிஎஃப் பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என வெளியாகிய அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் அடுத்த பாகத்திற்கான தொடர்ச்சியுடன் முடிக்கப்பட்டிருக்கும். இதனால், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஊரடங்கு, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதில் காலதாமதம் ஏற்பட்டது. இருப்பினும் இரண்டாண்டுகளாக தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு ஓரளவு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில், கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வெளியீட்டு தேதியை தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. வரும் 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி இந்த படத்திற்கான இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் யஷ் தனது மனைவி ராதிகா பண்டிட்டுன் துபாய் சென்றுள்ளார். இதனை இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.
துபாயில் டின்னர் டேட்டில் இருந்த இனிய தம்பதிக்கு ஓட்டல் நிர்வாகம் அழகான சர்ப்ரைஸ் ஒன்றைக் கொடுத்தது. அவருக்கு வழங்கப்பட்ட டெஸர்டில் வெயிட்டிங் ஃபார் கேஜிஎஃப் சேப்டர் 2, "waiting for KGF: Chapter 2." என்று எழுதப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த தம்பதி நெகிழ்ந்து போயினர். யஷ், ராதிகா தம்பதி இணையத்தில் ஒரு சென்சேஷனல் செலிப்ரிட்டி தம்பதி.
இரண்டாம் பாகத்தின் மெகா காஸ்ட் அண்ட் க்ரூ
இரண்டாம் பாகத்தில் யஷிற்கு வில்லனாக பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.
ஆதிரா கதாபாத்திரத்தில் அவர் நடிக்கும் கெட்டப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகண்டூர் இந்த படத்தை தயாரித்திருந்தார். அவரே படத்தின் இரண்டாம் பாகத்தையும் தயாரித்துள்ளார். யஷ், சந்தோஷ் நாராயணனுடன் படத்தின் நாயகியாக ஸ்ரீநிதி ரெட்டி, இந்தி நடிகை ரவீனா தாண்டன், ஆனந்த் நாக், ராமச்சந்திரன் ராஜூ, அஜ்யூத் குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.
முதல் பாகத்தில் ராக்கி என்ற நாயகனின் வாழ்க்கையை விளக்கும் பத்திரிகையாளர் கதாபாத்திரத்திற்கு, இந்த பாகத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் சண்டை காட்சிகளை அன்பறிவு சகோதரர்கள் உருவாக்கியுள்ளனர்.