ஐபிஎல் 2022 ஏலத்தில் தக்கவைக்கப்பட்ட முதல் வீரராக  எம்எஸ் தோனி இருப்பார் என்று சிஎஸ்கே அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


இந்தாண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -  சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள்  விளையாடிய ஐபிஎல் இறுதிப்போட்டியே முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனியின் வாழ்க்கையின் கடைசி போட்டியாக இருக்கும் என்று நிறைய கிரிக்கெட் ரசிகர்கள் ஊகித்தனர்.


இந்த நிலையில், ஐபிஎல் 2022 ஏலத்தில் தக்கவைக்கப்பட்ட முதல் வீரர் எம்எஸ் தோனி என்று சிஎஸ்கே அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. 


இந்த ஊகங்கள் அனைத்தும் நிறுத்தப்படுகின்றன. ஏனெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அதிகாரி ஒருவர் எம்.எஸ்.தோனி வரவிருக்கும் சீசனுக்கு உரிமையாளரால் தக்கவைக்கப்படுவார் என்று கூறினார். இதுதொடர்பாக சிஎஸ்கே அதிகாரி ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “தக்கவைப்பு இருக்கும். அது உண்மை.  தக்கவைப்பு எண்ணிக்கை இன்னும் நாம் அறிந்திருக்கவில்லை. தோனிக்கு முதல் அட்டை (retention card)  பயன்படுத்தப்படும்” என்று கூறினார்.






மேலும், "கப்பலுக்கு அதன் கேப்டன் தேவை. அடுத்த ஆண்டு தோனி திரும்பி வருவார் என்று உறுதியாக நம்புகிறேன்" என்று கூறிய அந்த அதிகாரி,  ஐபிஎல் 2022 இல் எம்எஸ்டி இருப்பதை உறுதி செய்துள்ளார். தோனி அடுத்த ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா, மாட்டாரா என்று ரசிகர்கள் குழம்பிய நிலையில் தற்போது தோனி விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.


முன்னதாக, துபாயில் நடைபெற்ற ஆட்டத்தின் பிறகு கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவிடம் தோனி பேசினார். அந்த உரையாடலின் தமிழாக்கம் பின்வருமாறு:   


ஹர்ஷா: அடுத்த ஆண்டில் உங்கள் திட்டம் என்ன? 
தோனி:  அடுத்த ஐபிஎல் தொடரில் கூடுதல் இரண்டு அணிகள் இடம்பெறும் என்ற பிசிசிஐ-ன் முடிவைப் பொறுத்தது.
ஹர்ஷா: நான் உங்களுக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான உறவைக் கேட்கிறேன் 
தோனி: சென்னை அணியின் எதிர்காலத்துக்கு எது நல்லது என்ற கருத்தின் அடிப்படையில் நாம் முடிவு செய்ய வேண்டும். முதல் நான்கு வீரர்களில் நான் இருப்பேனா  என்பதைப் பற்றியதல்ல. உண்மையில், அணியின் உரிமையாளர்களின் நலன்களைப் பற்றியது. அடுத்த 10 ஆண்டுகளுக்குத் தேவையான அணியை நீங்கள் உருவாக்க வேண்டும். 2008 இல் அப்படியொரு தீர்க்கமான முடிவை எடுத்தோம்.10 ஆண்டுகளாக அணியின் முக்கிய வீரர்கள் தொடர்ந்து பயணித்து வந்தனர். தற்போதும், சிறந்ததொரு முடிவை எடுப்பது அவசியம். 


ஹர்ஷா:  நான்கு முறை கோப்பையை வென்றது, 9 முறை இறுதிப் போட்டியில் பங்கேற்றது, அனைத்து தகுதிச் சுற்றுக்கும் முன்னேறியது (2020-ஐத் தவிர) எனஉங்களின்  தனிச் சிறப்பான செயல்பாடுகள் ஈடு இணையற்றது.
தோனி: நான், இன்னும் எனது பயணத்தை முடித்துக் கொள்ளவில்லை.       


அடுத்த ஐபிஎல் தொடரில் கட்டாயம் விளையாடுவேன். ஆனால், சென்னை அணியில் தானா என்ற கேள்விக்கு உங்களால் தற்போது பதில் காண முடியாது என்ற கருத்தை தோனி ஏற்கனவே கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண