பொன்னியின் செல்வனைப் போல் மற்றுமொரு வரலாற்று புனைவாக யாத்திசைத் திரைப்படம் வரும் மே 12 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது.
யாத்திசை:
பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களின் கவணத்தை தன் பக்கம் இழுத்து வைத்திர்ருந்த அதே நேரத்தில் வெளியானத் திரைப்படம் யாத்திசை. சோழர்களை பற்றியப் படம் பொன்னியின் செல்வன் என்றால் பாண்டியர்களைப் பற்றியத் திரைப்படம் யாத்திசை. ஒருவகையில் சோழர்கள் பாண்டியர்கள் ஆகியவர்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்வதற்கு ரசிகர்களை தூண்டியதில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பெரும் பங்குண்டு.
பொன்னியின் செல்வன் படத்தோடு ஒப்பிட்டால் மிகவும் குறைந்த பட்ஜடில் எடுக்கப்பட்டது . இந்த படத்தின் இயக்குனர் நடிகர்கள் ஆகிய அனைவரும் புதுமுக நடிகர்கள் ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் யாத்திசை படத்திற்கு வந்த வரவேற்பு ஆச்சரியமளிக்கக் கூடியது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய யாத்திசைத் திரைப்படம் வரும் மே 12-ந் தேதி(நாளை) அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது.
யாத்திசை கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி திரைக்கு வந்தது.தரணி ராஜெந்திரன் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருந்தார். படத்தின் வசனங்களை திருமுருகன் கலிங்கம் எழுதியிருந்தார்.சக்தி மித்ரன்,சேயோன், ராஜ லக்ஷ்மி ஆகியவர்கள் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.மேலும் குருசோம சுந்தரம், சந்திரகுமார் ஆகியவர்கள் துணை நடிகர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ரணதீரனை பற்றிய கதை:
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரனதீரன் என்கிற பாண்டிய மன்னனைப் பற்றியக் கதை யாத்திசை. இந்த காலகட்டத்தில் தான் சோழர்கள் தங்களது அதிகாரத்தை இழந்து காட்டுக்குள் மறைந்து வாழ்ந்தனர் என்றும் இந்தப் ப்டம் சித்தரிக்கிறது. அதிகாரம், நிலம் ஆகியவற்றுக்காக இவர்களுக்கிடையில் நிகழும் சண்டைகளை யாத்திசைப் படம் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்தப் படத்தின் உண்மைத் தன்மையைக் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
படத்தில் குறிப்பிடபட்டிருக்கும் காலம், மேலும் வரலாற்றுப் பிழைகள் இருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த விமர்சனங்களுக்கு மத்தியிலும் யாத்திசைப் படம் ரசிகர்களால் பாராட்டப் பட்டது.இந்தப் படத்தின் இயக்குனரான் தரனி ராஜேந்திரன் இதற்கு முன்பு ஞானச் செருக்கு என்னும் குறும்படத்தை இயக்கி இருந்தார்.ஒரு முழு நேர திரைப்படம் எடுப்பது இதுவே முதல் முறை இருந்தும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று இயக்குனராக வென்றிருக்கிறார் தரனி ராஜேந்திரன்.
ரசிகர்கள் ஆர்வம்:
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாண்டியர்களை பற்றிய மிக சில காட்சிகளே இடம்பெற்றிருந்த நிலையில் பாண்டிய வரலாற்றை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தார்கள்.யாத்திசை அந்தக் குறையை தீர்த்து வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.மிகவும் குறைந்த செலவில் எடுக்கப் பட்ட யாத்திசை திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்றிருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்க விஷயம்.