Yaanai Twitter Review: யானை படம் ராக்கெட் வேகத்தில போகுது.. ட்விட்டரை கலக்கும் கமெண்ட்டுகள்..
கமலின் விக்ரம் படம் வெளியாகி ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியதால் யானை படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 1 ஆம் தேதி தள்ளிப் போனது.

நடிகர் அருண் விஜய் நடித்துள்ள யானை படம் குறித்து கலவையான விமர்சனங்களை ட்விட்டர் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக உயர்ந்து வரும் நடிகர் அருண் விஜய் முதன்முதலாக தனது அக்கா கணவரான இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடித்துள்ள படம் “யானை”. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், அம்மு அபிராமி, ராதிகா சரத்குமார், யோகி பாபு, போஸ் வெங்கட், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் முதலில் இந்த படம் மே 6 ஆம் தேதியும்,பின் ஜூன் 17 ஆம் தேதி ரிலீசாவதாக தெரிவிக்கப்பட்டது.
Just In




ஆனால் கமலின் விக்ரம் படம் வெளியாகி ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியதால் படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 1 ஆம் தேதி தள்ளிப் போனது. இந்நிலையில் இன்று சுமார் 1500 திரையரங்குகளில் யானை படம் வெளியாகியுள்ளது. காலையில் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் படம் குறித்த விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். அவற்றில் சில...