Just In





Yaanai Single shot fight: சிங்கிள் ஷாட்டில் மிரட்டிய பலே ஃபைட் சீன்.. பறக்கும் சேர்கள்.. மிரட்டும் அருண்விஜய்..!
யானை படத்தில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது.

யானை படத்தில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது.
‘சாமி 2’ படத்துக்குப் பிறகு இயக்குநர் ஹரி இயக்கி அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர், அம்மு அபிராமி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள யானை திரைப்படம் இந்தமாதம் தொடக்கத்தில் (ஜுலை 1) வெளியிடப்பட்டது. ஃபேமிலி எண்டர் டெய்னராக உருவாகியிருந்த இந்தப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்தப்படத்தில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
முன்னதாக இந்தத்திரைப்படம் ஜூன் 17 ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், விக்ரம் படத்தின் வெற்றிக்கு மதிப்பளிக்கும் வகையில் ‘யானை’ திரைப்படம் வருகிற ஜூலை 1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்