ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழிக்கேற்ப அனைவரும் தாங்கள் அழகாக இருக்கவேண்டும் என்று ஆசைக்கொள்வர்.இது தொன்று தொற்று இருக்கும் விஷயம்தான் ஆயினும் இந்த மாடர்ன் காலத்தில் சமூக வளைதளங்களில் மூழ்கி கிடக்கும் இளம் வயதினர் இதற்கு அடிமை ஆகிவிட்டனரோ என்ற கேள்வி எழுகிறது.முன்பெல்லாம் தேனுடன் எலுமிச்சை சேருங்கள், தயிருடன் மஞ்சள் சேருங்கள் என வீட்டிலேயே இயற்கை பொருட்களை வைத்து தங்களை மெருகூட்டினர். ஆனால் இப்பொழுதோ சமூக வலைதளங்களில் அதிக ஃபலோவர்ஸ்களை வைத்துக்கொண்டு பயோவில் டி.எம் ஃபார் பெய்டு ப்ரொமொஷன் என குறிப்பிட்டு, இருக்கும் சோஷியல் மீடியாவில் செல்வாக்கு உள்ளவர்களை தான் பின்பற்றுகின்றனர். இவர்கள் பல பொருட்களை இணையத்தில் சந்தை படுத்திக்கொண்டு இருக்கின்றனர்.இதன் மூலம் வருமானம் ஈட்டுவதும் உண்டு .
நல்ல சருமம் வேண்டும் என்றால், ஸ்கின் கேர், மேக்கப் மற்றும் போதாது, அது போக நல்ல தூக்கம் ,ஒழுங்கான உணவு முறை ,உடல் பயிற்சி என பல விஷயம் மேற்கொள்ள வேண்டும். சினிமா நடிகர் மற்றும் நடிகைகளை பார்த்து அவர்களை போன்ற கச்சிதமான உடல் மற்றும் பொலிவான சருமம் வேண்டும் என ஆசைபடுவதும் உண்டு. நடிகர் மற்றும் நடிகைகள் திரையரங்குகளில் மிளிர்வது பார்க்க நன்றாக இருந்தாலும் அது போலியான பிம்பம் தான் ஏனென்றால் அவர்கள் நல்ல தோற்றத்திற்காக பிளாஸ்டிக் சர்ஜெரி, விலை உயர்ந்த மேக் அப் பொருட்கள், பிரத்யேகமான டயட் ஆகியவற்றை மேற்கொள்வர்.
சோஷியல் மீடியாவை பார்த்து பலர் ஏமாந்து போகிறார்கள் .பிரச்சனை என்ன வென்றால் பல பேர் “ஐயோ நாம் அவர்போல் அழகாக இல்லையே” என்று தாழ்வு மனப்பான்மை மனநிலையை அடைகின்றனர்.அதிக ஓ.டி.டி வலைதளங்களில் உள்ள கண்டெண்டை உள்வாங்குதலால் ப்ராண்டு மோகம் தொற்றி கொண்டது போலும்.இந்த அழகு சாதன பொருட்கள் யாவும் மேற்கிந்திய நாடுகளில் முன்னரே இருக்கின்றன. ஆனால் இப்போது தான் இந்திய மார்கெட்டில் பரவலாகிவருகிறது. சி.டி.எம் ரொட்டின் என பல்வேறு விஷயங்கள் உள்ளது இந்த ஸ்கின் கேரில்.
இதிலும் இயற்கை பொருட்களுக்கு என தனி மார்கெட்டிங் மற்றும் நுகர்வோர் கூட்டமே உள்ளது. இந்தியாவில் தெற்கை விட வடக்கில்தான் ஸ்கின் கேர் கண்டெண்ட்டை மக்கள் அதிகம் பார்க்கின்றனர். ஒருவர் அழகாக இருந்தாலும் அவர்களை விட அழகாக இருப்பவர்கள் போல் இருக்க வேண்டும் என்று ஆசை பட்டு பழகிவிட்டனர்.மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதே சோஷியல் மீடியாவிற்கு பொருந்தும் ..அங்கு பார்ப்பவை எல்லாம் மாயை என்று உணர்வதே புத்திசாலித்தனம்.