MK Stalin: உங்களின் சாதனைகள், இளைஞர்களின் மனதில் நம்பிக்கையை விதைக்கிறது- தோனிக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான வாழ்த்து!
MK Stalin Wished for MSD Birthday: எம்.எஸ். தோனிக்கு மு.க.ஸ்டாலினின் பிறந்தாள் வாழ்த்து..

மகேந்திர சிங் தோனிக்கு இன்று பிறந்தநாள். ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் டிவிட்டரில் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
அந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ். தோனியின் 41-வது பிறந்தாளில், அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Just In




அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் வாழ்த்தில், உங்களின் ஈடுஇணையில்லாத சாதனைகள் பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாய் இருக்கிறது. கிராமபுற பின்னணியில் வாழும் சாதாரணமானவர்களுக்கும் எட்டமுடியாத பெருங்கனவுகள் சாத்தியப்படும் என்பதை உணர்த்துகிறது உங்கள் வாழ்வு. சென்னையில் நீங்கள் மீண்டும் விளையாடுவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
இதோடு, இருவரும் இருக்கும் புகைப்படத்தையும் பகிந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சி. விஜயபாஸ்கர் வாழ்த்து:
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்