சிம்பு நடிப்பில் சயின்ஸ் ஃபிக்ஸனுடன் கூடிய அரசியலை மையமாக வைத்து வெளியான திரைப்படம்தான் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடுத்தது. பலக்கட்ட போராட்டத்திற்கு பிறகு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்தை ரிலீஸ் செய்தார் என்பது நாம் அறிந்ததே. படத்தில் எஸ்.ஜே.சூர்யா , ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோரின் கதாபாத்திரங்களும் வெகுவாக பேசப்பட்டது. படத்தில் தான் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்த ஒய்.ஜி.மகேந்திரன் சிம்புவையும் , எஸ்.ஜே சூர்யாவையும் வெகுவாக புகழ்ந்திருக்கிறார்.
அதில் ”நானும் எஸ்.ஜே.சூர்யாவும் இதற்கு முன்னதாக சந்தித்ததே கிடையாது. முதன் முறையாக அவரை அந்த ஷூட்டிங்கில்தான் சந்தித்தேன். அதுவும் வீட்டில் வந்து அவர் சொல்வார்... வந்தான்... சுட்டான்.. செத்தான் ரிப்பீட்டு... டயலாக் சமயத்தில்தான் சந்தித்தேன். அவர் எடுத்த வாலி படத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன். எப்போ வாலி 2 எடுக்க போறீங்க அப்படினுதான் பேசவே ஆரமித்தோம். எஸ்.ஜே.சூர்யா நடிப்பதை பார்க்கும் பொழுது நாடகத்தில் இவரை மிஸ் பண்ணிட்டோமேனுதான் ஃபீல் வருது. அவர் ரொம்ப கதாபாத்திரம் பற்றி யோசிப்பார். வந்தான் ..சுட்டான் டயலாக்கை வெவ்வேறு விதமாக சொல்லி பார்த்தான். அதுதான் ஒரு நடிகனுக்கு முக்கியம். அவர் ரொம்ப ஜாலியான ஆள். மாநாடு திரைப்படம் எனக்கு பொருத்தமான படம் . அதனை என்னால் உணர முடிந்தது.
ஷூட்டிங் சமயத்தில் சிம்புவும் , சுரேஷ் காமாட்சியும் எனக்கு மிகப்பெரிய பெயர் கிடைக்கும் என கூறினார்கள். சிம்பு தனது தகுதியை உணர்ந்துவிட்டார். இனிமேல் அவர் தனக்கு பொருத்தமான கதையை தேர்வு செய்வார். அவருக்கு சினிமாவுல எல்லாமே தெரியும்.அவர் திறமைசாளி. சிலர் பேர் செய்யுற தப்புனால ஒரு மதத்தையே தப்பு சொல்லக்கூடாதுனு மாநாடு படத்துல சொல்லியிருக்காங்க. அது சரியான ஒன்று. அது முஸ்லீமிற்கு மட்டுமல்ல , இந்து , கிருஸ்தவர்கள் யாராக இருந்தாலும் ஒன்றுதான். தனிப்பட்ட நபர் தவறு செய்தால் அவரின் பெயரை வைத்து தவறு செய்தார்கள் என சொல்லுங்கள். அவன் மதத்தை வைத்து குற்றம் சொல்லாதீர்கள் என்பதுதான் எனது கருத்து “ என கூறியுள்ளார்.