பாலா இயக்கத்தில் விஷால் , ஆர்யா கூட்டணியில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவன் இவன். அடித்தட்டு மக்களின் வாழ்வியலை வேறு கோணத்தில் காட்டும் பாலா, இந்த படத்திலும் அசத்தியிருப்பார். சாக்லெட் பாய் என அழைக்கப்பட ஆர்யாவையும் , மேன்லி ஹீரோ என அழைக்கப்படும் விஷாலையும் அடையாளமே தெரியாத மாதிரி மாற்றியிருப்பார் பாலா. படத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்திய அம்பிகாவும் வெகுவாக பாராட்டப்பட்டார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார் அம்பிகா. 






 


அதில்” அவன் இவன் படத்துல நடிக்க வரும் பொழுது சேச்சு உங்களுக்கு வழக்கமான கிளாமர் ரோல் கிடையாது, வழக்கமான அம்பிகா ஹேர் ஸ்டைல்  இல்லை. மற்றும் நிறம் கூட மாறியிருக்கும்னு சொன்னாங்க. அதோட சுருட்டு பிடிக்குற சீன், தண்ணீ அடிக்கிற சீன்லாம் இருந்தது. அந்த படத்தில் விஷாலை எட்டி உதைப்பது போல் ஒரு சீன். நான் முதல் முறையா அந்த பையன் கூட நடிக்கிறேன். அதனால நான் விஷால்கிட்ட சொன்னேன். தம்பி நான் காலை ஓங்கும் போது நீ விழுந்துடுனு. ஆனால் விஷால் அதனை மறுத்துட்டார். நீங்க உதைச்சாதான் நான் உருண்டு விழ முடியும் உதைங்கன்னு. இத்தனை வருடங்களா நான் எந்த நடிகர்களை அடித்ததே இல்லை. ஆனா பாலா சார் அதல்லாம் விஷால் தப்பா எடுத்துக்க மாட்டார்னு சொன்னார். என்னோட ஒரு உதையில நிஜமாவே இரண்டு முறை ரோல் செய்வதற்கான ஃபோர்ஸ் இருந்துச்சு. அதன் பிறகு விஷால் சொன்னேன் அதுக்காக இப்படியானு சொன்னார்.நான் அடி வாங்கியிருக்கேன் . அதனால எனக்கு பயம் இருந்துச்சு. எவ்வளவோ சொன்னேன் கேட்கல. அந்த சீனுக்கு நிறைய பாராட்டு கிடைத்ததையும் மறுக்க முடியாது. எனக்கு ரொம்ப பிடிச்ச படம் . ஆனால் நிறைய கெட்ட வார்த்தை பேசனும். நிறைய பேசுனேன்“என மனம் திறந்து பேசியிருக்கிறார் அம்பிகா.