சினிமாத் துறையில் நேரடியாக மட்டுமல்ல மறைமுகமாகவும் சமூகப் புறக்கணிப்புகள் பலவிதத்தில் இருப்பதாக ரைட்டர் திரைப்ப இயக்குநர் ஃப்ராங்க்ளின் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.


பா.ரஞ்சித்தின் நீலம் புரடக்‌ஷன் சார்பில் ஃபிராங்கிளின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ரைட்டர். படத்தில் நாயகனாக சமுத்திக்ரகனி நடிக்க  முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை இனியா நடித்துள்ளார். இவர்களுடன் திலீபன், சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.


சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ள ரைட்டர் திரைப்படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகி விமர்சன் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் ரைட்டர் திரைப்ப இயக்குநர் ஃப்ராங்க்ளின் ஜேக்கப் அளித்துள்ள பேட்டியில் சினிமாத் துறையில் சமூகப் புறக்கணிப்பு குறித்து ஆழமாகப் பேசியிருக்கிறார்.


இது குறித்து அவர், சினிமாத் துறையில் புறக்கணிப்புகள் எனக்கும் மட்டும் தான் என்று சுருக்கிப் பார்க்க முடியாது. இளம் இயக்குநர்கள் சிலர் எங்கிருந்து வருகிறார்கள் என்று தெரிந்து கொண்டாலே அவர்களிடம் கதை கேட்காமல் புறக்கணிப்பது எல்லாம் நடைபெறும். நான் இயக்குநர்களை எப்படி அணுகுவேன் என்பதே காமெடியாக இருக்கும். அதைவைத்தே நான் ஒரு தனிக் கட்டுரை கூட எழுதலாம். ஒரு தயாரிப்பாளரிடம் நான் கதை சொல்லச் சொன்னேன் சென்றார். அவர் ஒரு ஓட்டலுக்கு என்னை வரச் சொன்னார். அங்கே அந்த அறையில் ஆறேழு பேர் இருந்தனர். தயாரிப்பாளர் மெத்தையில் படுத்தவாறே கதை சொல்லச் சொன்னார். எனக்கு அங்கு கதை சொல்லவே மனம் வரவில்லை. தயக்கமாக இருந்தது. இருந்தும் வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்று சொல்ல ஆரம்பித்தேன். குறுக்கிட்டு, இதெல்லாம் வேணாம் கதையில் ஏதாவது பெஸ்ட் என காமெடிக் காட்சி இருக்கும் அல்லவா அதைச் சொல்லு என்றார். இப்படித்தான் புறக்கணிப்புகள் என்பது நேரடியாகக் கூட இல்லாமல் இவ்வாறாக மறைமுகமாகவும் நடக்கின்றன. ஆனால், இதைப் பற்றியெல்லாம் பேசாத, யோசிக்காத நிறைய சினிமா தயாரிப்பு நிறுவனங்களும் இருக்கின்றன. என்னுடைய எதிர்பார்ப்புகள் எல்லாம் சினிமாத் துறையில் சமூகப் புறக்கணிப்பே இருக்கக் கூடாது என்பது தான். ரஞ்சித் சார் சொல்வது போல் இங்கே இது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.


இவ்வாறு அவர் உணர்ச்சி பொங்க பேசியிருக்கிறார்.




ரைட்டர் படத்தில் சமுத்திரகனி கதாபாத்திரை நிறுவ நீங்கள் எடுத்துக் கொண்ட நேரம் மிகமிக அதிகம் என்று விமர்சனங்கள் வருகின்றனவே என்ற கேள்விக்கு, "தனி மனிதனின் முடிவுக்குப் பின்னணியில் அவனின் குடும்பமும் இருக்கிறது. ஒரு போலீஸ் என்றால் அவர் போலீஸ் மட்டுமல்ல ஒரு மனிதன், ஒரு குடும்பஸ்தன் தான் காவலராக இருக்கிறார். ஒருவர் போலீஸாராக மட்டுமே இருந்தால் அவரை சமூகத்துடன் பொருத்திப் பார்க்கும் வாய்ப்பே இருந்திருக்காது. இதனை யதார்த்தமாக சொல்ல வேண்டும். ஒரு மனிதனிடம் இருந்து போலீஸைத் தேடும் முயற்சிதான் ரைட்டர் திரைப்படத்தில் சமுத்திரகனியின் கதாபாத்திரம் எழுதப்பட்டது" என்றார்.


காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையேயான உறவை இந்தப் படம் பேச வேண்டும் என்பதற்கான புள்ளி எது என்ற கேள்விக்கு, "நாம் அனைவருமே காவலர்களை நம் வாழ்வில் கடந்திருப்போம். காவல்துறையினரை நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையில் மட்டுமே பார்க்கவும் கூடாது, அதேவேளையில் காவல்துறையினரை புனிதப்படுத்தி, இவர்கள் எல்லோரும் பாவமானவர்கள் என்ற பாவ மனநிலையையோ ஏற்படுத்திவிடக் கூடாது. இந்த பின்னனியில் தான் நான் இந்தக் கதையை உருவாக்கினேன். காவலர்களின் மனித உரிமைகளைப் பேண வேண்டும் என்ற பார்வையில் இந்தக் கதையை உருவாக்கினேன்" என்று கூறினார்.