சமூக வலைத்தளங்களில் சில வீடியோக்கள் அல்லது கருத்துகள் எப்படி பிரபலம் அடைகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. அவ்வாறு அவற்றில் ஒருவரின் வீடியோ வைரல் ஆகிவிட்டால் அடுத்த நிமிடம் அவர் ஒரு பிரபலமாக உருவெடுப்பார். அந்தவகையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒரு பெண்ணின் வீடியோ மிகவும் வைரலாகி உள்ளது. அப்படி வைரலாக அவர் என்ன செய்தார்?


இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒருவர் கிராமபுரத்தில் ஒரு பெண் ரொட்டி சுடும் வீடியோ ஒன்றை பகிர்ந்தார். அதில் அப்பெண் எப்படி லாவகமாக தன் கையில் தேய்த்த ரொட்டியை சரி செய்வது போல் காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இந்த வீடியோ திடீரென்று மிகவும் வைரல் ஆகியுள்ளது. இதனை 2 மில்லியன் பேருக்கு மேல் பார்த்துள்ளனர். அத்துடன் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக் களும் இந்த வீடியோவிற்கு கிடைத்துள்ளது. 


 






மேலும் இந்த வீடியோ தொடர்பாக பலரும் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஒரு சில அவர் ரொட்டி சுடும் அழகை ரசித்து பதிவிட்டு வருகின்றனர். மற்றவர்கள் இவரை ஒரு பாலிவுட் படத்தில் நடிகையாக நடிக்க வைக்கலாம் என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் இதே பக்கத்தில் அந்தப் பெண் தொடர்பாக மற்றொரு வீடியோவும் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவை தற்போது அதிகம் பார்த்து வருகின்றனர். 


 






எனினும் இந்த வீடியோவில் இருக்கும் பெண் யார். எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தொடர்பான விவரங்கள் எதுவும் தெரியவில்லை. அவர் இருக்கும் இடத்தை பார்க்கும் போது இது வட மாநிலங்களில் ஒரு பகுதியாக இருக்கலாம் அல்லது இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்கலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். யாரென்றே தெரியாத ஒரு பெண், அவரை இத்தனை மில்லியன் பேர் கண்டு ரசித்திருக்கிறார்கள். பெரிய அளவில் அந்த வீடியோவிலும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் அது பலரை கவர்ந்திருக்கிறது. என்ன டேஸ்டோ என சிலர் கலாய்த்தாலும், அதுவும் ஒரு கலை தானே என கொண்டாடுகிறது இன்னொரு தரப்பு. 


மேலும் படிக்க: SPB 75: பில் கிளிண்டன் வைத்த கோரிக்கையும் காத்திருந்த பாலுவும்! எஸ்.பி.பி., இல்லாத முதல் பிறந்தநாள் இன்று!