தீ விபத்தில் சிக்கிய பவன் கல்யாண் மகன்
தெலங்கானா துணை முதலமைச்சர் பவண் கல்யாணின் மகன் மார்க் ஷங்கர் பவனோவிச் (10 வயது ) சிங்கப்பூரில் படித்து வந்த பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் அடுக்குமாடி கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் இந்த பள்ளி செயல்பட்டு வந்தது. நேற்று ஏப்ரல் 8 ஆம் தேதி திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தால் பவன் கல்யாண் மகன் மார்க் உட்பட 20 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். மேலும் மாணவி ஒருவர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். நேற்று மாலை பவன் கல்யாண் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார்.
இன்று பவன் கல்யாண் சிகிச்சையில் இருக்கும் தனது மகனை சந்தித்தார். விபத்தில் கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் கரும்புகையை சுவாசித்ததால் அவரது நுரையீரல் பாதிப்படைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மகனுக்கு ஏன் மார்க் என்று பெயர்
ரஷ்ய நடிகையான அனா லெவ்செனாவை 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் பவன் கல்யாண். ரஷ்ய கத்தோலிக்க கிறித்தவரான அனா திருமணத்திற்கு பின் இந்திய சடங்கு சம்பிரதாயங்களிலும் ஈடுபட்டு வருகிறார். அதே நேரம் தனது மதத்தையும் பின்பற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு மார்க் ஷங்கர் பவனோவிச் மற்றும் பொலெனா அஞ்சனா பவனோவா என இரு குழந்தைகள் உள்ளார்கள்.
அரசியல் மேடைகளில் இந்து மதத்தையும் சனாதன தர்மத்திற்கு ஆதரவாக தொடர்ச்சியாக பேசி வருகிறார் பவன் கல்யாண். சனாதனத்தை எதிர்த்து பேசுபவர்களையும் கடுமையாக விமர்சித்து சர்ச்சையை கிளம்ப்பியுள்ளார். இப்படியான நிலையில் சனாதனத்தை கொண்டாடும் பவன் கல்யாண் தனது மகனுக்கு ஏன் மார்க் என்கிற பெயரை வைத்துள்ளார் என்கிற கேள்வி சமூக வலைதளத்தில் எழுந்துள்ளது.
பவன் கல்யாணின் மனைவி அனா கத்தோலிக்கர் என்பதால் கிறித்தவ பெயரான மார்க் என்கிற பெயரை அவருக்கு வைத்துள்ளார்கள். ஷங்கர் என்பது பவன் கல்யாணின் அண்ணன் சிரஞ்சீவியின் பெயர் ஷங்கர் என்பதால் அந்த பெயரை இணைந்து மார்க் ஷங்கர் என்று வைத்துள்ளார். கடைசியாக வரும் பவனோவிச் என்பது பவன் கல்யாணின் பெயருடன் ரஷ்ய பெயரை ரஷ்ய மொழிப்படி சொல்லை இணைந்துள்ளார்