‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு போட்டியாக ‘நானே வருவேன்’ படத்தை ரிலீஸ் செய்வதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து அந்தப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியிருக்கிறார். 


இது குறித்து பேசியிருக்கும் அவர், “பொன்னியின் செல்வன் படத்திற்கு எதிராக ‘நானே வருவேன்’ படம் வெளியிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதில் அவர்களுக்கும் சரி, எங்களுக்கும் சரி எந்த வித கருத்துவேறுபாடு இல்லை.




 


உதாரணத்துக்கு ஜூன் மாதம் 25 ஆம் தேதி நானும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் சிஇஓ தமிழ்குமரனும் பேசும் போது, இரண்டு பேரும் ஒரே மாதத்தில்தான் வருகிறோம் என்றேன். உடனே அவர் ஏன் என்று கேட்டார்? .. அதற்கு  பதிலளித்த நான்  ‘அசுரன்’ படத்தை பண்டிகையின் போதுதான் வெளியிட்டேன். அதே போல இதிலும் அந்த 9 நாட்களை நான் விடமாட்டேன் என்று சொன்னேன்.


நன்றி: Behindwoods


 






இங்கு பண்டிகையின் போது நிறைய படங்கள் வந்திருக்கின்றன. அந்த சமயத்தில் 4 படங்கள் வந்தால் கூட தாங்கும். இந்த போட்டியில்  ஏன் இன்னும் கூட 2 படங்கள் எதிர்பார்க்கலாம். இந்த 9 நாள் விடுமுறை நாட்கள் அப்படியானதுதான். இத மிஸ் பண்ணவே கூடாது. இன்னொன்று நான் அவர்கள் வெளியிடும் அதே தேதியில் வெளியிடவில்லை. ஒரு நாள் முன்னதாகத்தான் வருகிறேன். இதிலிருந்து நான் அவர்களுடன் போட்டி போட வில்லை என்பது தெரிகிறது.” என்று பேசியிருக்கிறார். 


கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள சரித்திர காவிய திரைப்படமான "பொன்னியின் செல்வன்" திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு இருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.


 






பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கும் இந்தப்படம் வருகிற 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதே போல செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்  ‘நானே வருவேன்’. இந்தப்படம் வருகிற செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.