90 'ஸ் களின் முன்னணி நடிகைகளில் ஒருவராக  கனவு கன்னியாக தமிழ் சினிமாவை கலக்கி வந்தவர் நடிகை ரம்பா. அவரின் சொந்த தயாரிப்பில் 2003ம் ஆண்டு வெளியான திரைப்படம் "த்ரீ ரோஸஸ்". பரமேஸ்வர இயக்கிய இப்படத்தில் நடிகை ரம்பா, ஜோதிகா மற்றும் லைலா நடித்த இந்த அதிரடி திரைப்படம் வெளியாகி இன்றோடு 19 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


 


தோல்வியை சந்தித்த ரம்பா:


 


உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அனைவரின் நெஞ்சங்களை எல்லாம் அள்ளியவர் தொடையழகி நடிகை ரம்பா. சில படங்களிலேயே புகழின் உச்சிக்கு சென்ற ரம்பா கமல், ரஜினி, விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களோடும் டூயட் பாடியவர். பிறகு புதுமுகங்கள் அறிமுகங்களால் வாய்ப்புகள் குறைந்து போக தனது அண்ணன் வாசுவின் ஆலோசனையின் படி "த்ரீ ரோசஸ்" என்ற படத்தை தயாரிக்க முன்வந்தார். இப்படத்திற்காக ஏராளமாக கடன் பெற்று அதை திருப்பி தர முடியாமல் அவதிப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 



 


"த்ரீ ரோசஸ்" திரைப்படத்தில் ரம்பா, ஜோதிகா மற்றும் லைலா மூவரும் நெருங்கிய தோழிகள். ஒரு சிக்கலில் மாட்டி கொண்டு பின்னர் அதில் இருந்து எப்படி மீளுகிறார்கள் என்பது படத்தின் கதை. இப்படத்தில் விவேக், ஊர்வசி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ஒரு தோல்வி படமாக அமைந்தது. அதற்கு பிறகு சரியான வாய்ப்புகள் அமையாததால் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் ரம்பா. 



வாய்ப்புகளை இழந்த காலம்:


இப்படத்தில் நடித்த லைலாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. பிதாமகன், உள்ளம் கேட்குமே, கண்ட நாள் முதல் என பல தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார் நடிகை லைலா . நடிகை ஜோதிகாவுக்கு வாய்ப்புகள் குவிந்தன. மொழி, பேரழகன், சந்திரமுகி, என தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்திருந்தார் நடிகை ஜோதிகா. ஆனால் ரம்பாவுக்கு பெரிதாக எந்த வாய்ப்பும் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை. ஒரு சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். த்ரீ ரோசஸ் திரைப்படம் ரம்பாவின் வாழ்க்கையில் ஒரு புயலை ஈடுபடுத்தியது என்றே சொல்லலாம். 


 


 






 


ரம்பாவின் குடும்பம் :


நடிகை ரம்பாவிற்கு இரண்டு பெண்குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ரம்பா அடிக்கடி அவரது கணவர் குழந்தைகளுடன் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வது வழக்கம். மூன்று குழந்தைகளுக்கு தாயான பின்பும் இன்றும் இளமையோடு அன்று போலவே இருக்கிறார் ரம்பா.