தனுஷ் நடித்த  ‘எனை நோக்கி பாயும் தோட்டா’  படம் ஏன் தோல்வியடைந்தது என்பது குறித்து இயக்குநர் கெளதம் மேனன் மனம் திறந்து பேசியுள்ளார். 


இது குறித்து கெளதம் மேனன் பேசும் போது, “  வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் சிலம்பரசனுக்கு ஹிட் படம் கொடுத்தாச்சு. தனுஷூக்கு படம் ஹிட் கொடுக்க முடியவில்லையே என்று யோசிக்க வில்லை. நாங்கள் நல்ல படம் எடுக்க முயற்சி செய்தோம். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அந்தப்படம் தோல்வி அடைந்ததற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதை ஒரு படமாகவே என்னால் முடிக்க முடியவில்லை. அந்த சமயத்தில் தனுஷூக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுவிட்டது.


 






அதனால் அந்தப்படத்தின் மீது தனுஷூக்கு ஆர்வம் போய் விட்டது. ஒரு கட்டத்தில் படத்தை ஒழுங்காக முடிக்க தனுஷிடம் சென்று பேசவும் முடியவில்லை. அதனால் அந்தப்படத்தை வேக வேகமாக முடித்தோம்.  ‘மறுவார்த்தை பாடலை கூட நாங்கள் நினைத்தது போல ஷூட் செய்ய முடியவில்லை.  டப்பிங் கூட 5 மணி நேரம் தான் தனுஷ் செய்தார். மறுபடியும் அவருடன் இணைந்து வேலை செய்ய எனக்கு ஓகேதான். ஆனால் அந்த அழைப்பு அவரிடம் இருந்துதான் வரவேண்டும்.” என்று பேசியிருக்கிறார். 


 






கெளதம் மேனன் முதன்முறையாக தனுஷூடன் இணைந்த திரைப்படம்  ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இந்தப்படத்தின் போது கவுதம் மேனன், தயாரிப்பாளர் மதன், தனுஷ் ஆகியோருக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதால், படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகமலேயே இருந்தது. படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் கதை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத காரணத்தால் படம் படுதோல்வியை சந்தித்தது.