'என்னைப் பார்த்து பாண்டு, நிழல்கள்ரவி பயப்படுவார்கள்' - மதன் பாப் ஓபன் அப்!

அதன் பிறகு காலப்போக்கில் மதன் பாபு என அழைத்து , பின்னர் மதன் பாப் என ஆகிவிட்டது.

Continues below advertisement

மதன் பாப்:

Continues below advertisement

சினிமாத்துறையில் இசைக்கலைஞராக வேண்டும் என ஆசைப்பட்டவர்தான் மதன் பாப். இவரது இயற்பெயர் கிருஷ்ண மூர்த்தி. இவர் பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார். மேலும் சில நகைச்சுவை மேடை நிகழ்ச்சிகளின் நடுவராகவும் பங்கேற்றிருக்கிறார். 

மதன் பாப் பெயர்காரணம் :

மதன் பாபுவின் சித்தப்பா பெயர் கிருஷ்ணமூர்த்தி.  எட்டாவது குழந்தையாக பிறந்த மதன் பாபுவிற்கும் பெற்றோர்கள் அதே பெயரை வைத்துவிட்டனர். ஒரு காலக்கட்டத்தில் மதன் பாப்பின் பெயரை மாற்றச்சொல்லி சொல்லியிருக்கிறார்.  மதன் பாப் பிறந்த பொழுது 10 பவுண்ட் இருந்தாராம். எல்லோரும் அவரை ஆச்சர்யமாக பார்த்தார்களாம். சிறு வயதில் குண்டாக , சிவப்பாக இருப்பேன் அதை பார்த்துதான் எனக்கு மதன் என பெயர் வைத்தனர். எனது தம்பியின் பெயர் பாபு , என்னுடைய இசை குழுவிற்கு  மதன் அண்ட் பாபு என வைத்திருந்தேன். அதன் பிறகு காலப்போக்கில் மதன் பாபு என அழைத்து , பின்னர் மதன் பாப் என ஆகிவிட்டது.  பாலச்சந்தர் சாரும் அதே பெயரை படத்தின் டைட்டில் கார்டில் போட்டுவிட்டார்.


நீண்ட நேரம் சிரிக்க காரணம் :

மதன் பாப் என்றாலே சிரிப்புதான் . அவரது சிரிப்பை பார்த்தாலே பாதி பேருக்கு சிரிப்பு வரும் . அந்த சிரிப்பு இயல்பானதுதான் என்கிறார் மதன். தனக்கு அழுகை , சிரிப்பு எல்லா உணர்ச்சிகளுமே அதிகமாகத்தான் வரும் . அதே போலத்தான் கோவமும் வரும் . கோவப்பட்டால் கை நீளும். பாண்டு , நிழல்கள் ரவி எல்லாம் என்னை பார்த்தால் பயப்படுவார்கள். இந்த அதீத உணர்ச்சிகள் எனக்கு 95 சதவிகிதம் நன்மையை கொடுத்திருந்தாலும் 5 சதவிகிதம் மைனஸாகவும் இருந்திருக்கிறது என்றார் மதன்பாப்.

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola